ஞாயிறு, 8 ஜனவரி, 2017

தீபாவுக்கு வன்னியர்,முத்தரையர் சங்கங்கள், தலித் அமைப்புக்கள் ஆதரவு .. தினமலர் பார்ப்பன சொம்புகளும்..! இது இடிக்குதே?

தீபாவிற்கு வன்னியர் சங்கம், முத்தரையர் சங்கம், தலித் அமைப்புகள் ஆதரவு? சசிகலாவிற்கு எதிராக தீபாவை சிலர் முன்னிறுத்தி வருகின்றனர். சசிகலாவிற்கு எப்படி அதிமுகவை வழிநடத்துவதற்கு தகுதி இல்லை என கட்சியின் குறிப்பிட்ட சில பிரிவினர் கருதுகின்றனரோ, அதே போலவே தீபாவையும் பொதுமக்கள் ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை. காரணம் திமுகவை வீழ்த்த இந்த இரண்டு பேரும் தகுதியான ஆள் இல்லை என்பதே பொதுமக்களின் கருத்தாக உள்ளது. ஜெயலலிதாவிற்கு இருந்தது போன்ற கரிஸ்மா இந்த இரண்டு பேருக்கும் இல்லை. புகழின் உச்சத்தில் இருந்த ஜெயலலிதாவே கடந்த தேர்தலில் திணறித் தான் ஜெயித்தார். ஆனால் அதிமுகவில் தற்போது நடக்கும் கூத்துகள் அந்த கட்சி பிழைக்காது என்பதையே உணர்த்துகின்றன. இந்நிலையில் தீபாவிற்கு வட மாவட்டங்களில் இருக்கும் வன்னியர் சங்கங்களும், முத்தரையர் சங்கங்களும், தலித் மற்றும் சிறுபான்மையினர் அமைப்புகளும் ஆதரவு அளிக்க தயாராக இருப்பதாக தினமலர் 2 ஆம் பக்கத்தில் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது.
அந்த அமைப்புகளின் பெயர் மற்றும் பேட்டியளித்த நிர்வாகிகளின் பெயர் வெளியிடப்படவில்லை. இதன் மூலம் இந்த செய்தியின் உண்மைத் தன்மை கேள்விக் குறியாகியுள்ளது. தீபாவை தினமலர் முன்னிறுத்துவது தீபாவை பலவீனப்படுத்தும் என சமூக வலைதளங்களில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. லைவ்டே


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக