செவ்வாய், 31 ஜனவரி, 2017

ஜல்லிகட்டு முழுவெற்றி ! தடைகளை உடைத்தெறிந்த மக்கள் சக்தி! உச்சநீதிமன்றதில் செருப்படி வாங்கிய ஜல்லிகட்டு எதிரிகள்!

Venkat Ramanujam s · Why you are opposing #Taminadu #Jallikattu Law .. and then said we want to close this case .. #SupremeCourt teared part #awbi .. 😂 😂 நீதிமன்றம் கேள்விக்கு பின்னால் லட்சக்கணக்கான #தமிழ் மாணவர்கள் கூடிய கூட்டத்தின் சக்தி இது .. உங்க #porki Dr. Subramanian Swamy #BJP MP போல சும்மா மங்களூரில் 23 useless #RSS நபர்கள் முன்னாள் போட்ட ஸீன் இல்லை இது.. உணர்ந்து கொண்டு அந்த பொறுக்கி சுவாமியை கட்சியில் இருந்து நீக்க ஆவண செய்யுங்கள் H Raja Pon Radhakrishnan K.T.Raghavan Nirmala Sitharaman Tamilisai Soundararajan  முகநூல் உபயம்

ஜல்லிகட்டு நடத்த தமிழக அரசு கொண்டுவந்த அவசர சட்டத்தை எதிர்த்து மத்திய அரசின் கீழ் செயல்படும் விலங்குகள் நல வாரியம் மற்றும் தனியார் விலங்குகள் நல அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தன. நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு முன்பு வழக்கு பரிசீலிக்கப்பட்டது. தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் மோகன் பராசுரன், ஆஜரானார். அப்போது தமிழக அரசு நிறைவேற்றியுள்ள இந்த ஜல்லிகட்டு சட்டம் உச்சநீதிமன்றத்தின் 2014 உத்தரவுக்கு எதிரானது என நீதிபதி தெரிவித்துள்ளார். இப்போது சட்டம் இயற்ற அவசியம் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக வன்முறை எழுகிறது என்றால், அதனை அமைதியாக முடிவுக்கு கொண்டுவராமல் ஏன் வன்முறை ஏற்படும் வரை தமிழக அரசு அனுமதித்தது என்றும், போராட்டம் நடத்தியதற்காக சட்டம் இயற்றினால், உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறிய கர்நாடகாவை எப்படி தமிழக அரசு கேள்வி கேட்க முடியும் என்றும் நீதிபதி கேள்வி எழுப்பியதாக தெரிகிறது.
அதே நேரம் தமிழக அரசின் சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்து விட்டார் என்றும் விரைவில் அரசிதழலில் வெளியிடப்படும் என்றும் மத்திய அரசின் வழக்கறிஞர் கூறியுள்ளார். இந்நிலையில் தமிழக அரசின் ஜல்லிகட்டு சட்டத்திற்கு தடை விதிக்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், இந்தச் சட்டத்தை எதிர்ப்பவர்கள் தங்களது வாதத்தை திருத்தி தாக்கல் செய்யவும், தமிழக அரசு பதில் மனுத் தாக்கல் செய்யவும் 6 வார காலம் அவகாசம் வழங்கியுள்ளது. லைவ்டே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக