புதுடில்லி: தகவல் அறியும் உரிமைச் சட்டத் தின் கீழ், தன் கல்வித் தகுதி
பற்றிய தகவலை, தெரிவிக்க வேண்டாமென, மத்திய ஜவுளித் துறை அமைச்சர்,
ஸ்மிருதி இரானி கேட்டதாக, டில்லி பல்கலையின் அங்கமான, 'ஸ்கூல் ஆப் ஓபன்
லேர்னிங்' கல்வி மையம் கூறியுள்ளது.
பா.ஜ.,வை சேர்ந்த, மத்திய ஜவுளித் துறை <
அமைச்சர், ஸ்மிருதி இரானி, 2004, 2011 மற்றும் 2014ம்
ஆண்டுகளில் நடந்த லோக்சபா தேர்தல் களின்போது, வேட்பு மனுவுடன் தாக்கல்செய்த
பிரமாணப் பத்திரத்தில், முரண்பட்ட கல்வித் தகுதிகளை குறிப்பிட்டு உள்ளதாக
சர்ச்சை எழுந்தது.<
இது தொடர்பாக, தகவல் அறியும் உரிமை சட்டத் தின்
கீழ், தகவல் உரிமை ஆர்வலர் ஒருவர் விண்ணப்பித்தார். அதற்கு, டில்லி
பல்கலையின், 'ஸ்கூல் ஆப் ஓபன்லேர்னிங்' கல்வி மையம் அளித்த பதிலில், 'தன்
கல்வித் தகுதி பற்றிய தகவலை, தெரிவிக்க வேண்டாமென, ஸ்மிருதி இரானி
கேட்டுள்ளார். >எனவே, மனுதாரர் கேட்டுள்ள, ஸ்மிருதி இரானி குறித்த தகவலை அளிக்க இயலாது' என,
கூறியுள்ளது. இதையடுத்து, தகவல் அளிக்க முடியாததற்கு விளக்கம்
அளிக்கும்படி, டில்லி பல்கலையின் பொது தகவல் அதிகாரிக்கு, மத்திய தகவல்
கமிஷன், 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.தினமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக