புதன், 4 ஜனவரி, 2017

மார்பை கசக்கினார் போலீஸ் ஆய்வாளர் ரவி”மேடவாக்கம் போராட்டத்தில் ஈடுபட்ட‌ பெண்களின் அதிர்ச்சி


கடந்த 31-ஆம் தேதி மத்திய அரசின் ரூபாய் நோட்டைத் திரும்பப் பெறும் நடவடிக்கை குறித்து ஆர்ப்பாட்டம் நடத்தியது இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம். இதில் ஆண்கள், பெண்கள் என பலர் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது காவல்துறை ஆய்வாளர் ரவி, காவலர் நடராஜ் ஆகியோர் பாலியல் சீண்டல்களை செய்திருக்கின்றனர். அதைக் கண்டித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆண்களை காவல்துறை கடுமையாக தாக்கியது. இது ஊடகங்களில் வெளியாகி பலரும் கண்டித்த நிலையில், காவல்துறையினரின் அத்துமீறலுக்கு ஆளாகிய பெண்கள் தங்களுக்கு என்ன நடந்தது என்பதை விரிவாக பேசியுள்ளனர்.
அதில், ஆய்வாளர் ரவி, மகள் வயதில் இருந்த ஒரு பெண்ணின் மார்பை கசக்கினார் என்றும் பாலியல் வசைச் சொற்களால் பெண் காவலர்கள் உட்பட தங்களை பேசினர் என்றும் தெரிவித்துள்ளனர்.
அதோடு, சங்க நிர்வாகிகளை போராட்டத்தில் இனி ஈடுபடக்கூடாது என்பதற்காக பெயரைக் கேட்டு கேட்டு அடித்ததாகவும் தெரிவிக்கின்றனர். சங்கம், போராட்டம் என்று திரிந்தால் பாலியல் தொழிலாளிகளாகவே மாற்றிக்காட்டுவோம் என போலீஸார் மிரட்டியதாகவும் இந்தப் பெண்கள் தெரிவிக்கின்றனர்.
அதிர்ச்சியளிக்கும் இவர்களின் வாக்குமூலத்தை இந்த வீடியோவில் கேளுங்கள்…  thetimestamil.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக