வெள்ளி, 27 ஜனவரி, 2017

தமிழக மக்களின் மெரினா பிரகடனம் !

வினவு.காம் :
Marina declarationங்கிலேயனை எதிர்த்த விடுதலைப் போராட்டத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க சின்ன மருதுவின் திருச்சிப் பிரகடனத்தைப் போல உலகையே திருப்பிப் பார்க்க வைத்த தமிழக மக்களின் மெரினா போராட்டத்தில் தமிழக மக்களின் மெரினா பிரகடனம் 22.01.2017 அன்று அறிவிக்கப்பட்டது. இந்த பிரகடனத்தை மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர்  தோழர் ராஜூ அறிவித்து விட்டு, இதில் சேர்க்கை, திருத்தம், விமரிசனம் இருந்தால் கூறுங்கள் என்று கோரிக்கை விடுத்தார். பிறகு அங்குள்ள மக்களால் இந்த பிரகடனம் பெரும் ஆரவாரத்துடன் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. பாருங்கள் பகிருங்கள்.

தமிழக மக்களின் மெரினா பிரகடனம்
  • தமிழக விவசாயிகளுடைய அனைத்து வகைக் கடன்களும் ரத்து !
  • காவிரி டெல்டா விவசாயிகளுக்கு மின் கட்டணம் கல்விக் கட்டணம், பேருந்துக்கட்டணம் ஆகியவை அடுத்த அறுவடை வரை ரத்து !
  • ஜல்லிக்கட்டை நடத்த நிரந்தர சட்டம் !
  • மூடு டாஸ்மாக்கை !
  • ஆற்று மணல் தாது மணல் கிரானைட் போன்ற கனிமவளக் கொள்ளைக்குத் தடை !
  • நீர்நிலைகளைப் பராமரித்து பாதுகாக்கும் பொறுப்பு கண்காணிக்கும் அதிகாரம் – மக்களுக்கே !
  • பணமதிப்புநீக்கத்தால் பாதிக்கப்பட்ட சிறுதொழில்களுக்கு இழப்பீடு, உடனடிக் கடன் !
  • படித்த இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் வரை உதவித்தொகை !
  • தமிழகத்தை அழிக்க வரும் அணு உலை, நியுட்ரினோ, மீத்தேன் ஷேல் கேஸ், கெயில் குழாய் பதிப்பு ஆகியவற்றுக்கு நிரந்தரத் தடை!
  • மீனவர்களின் வாழ்வாதாரம், உயிர்பாதுகாப்புக்கு உத்தரவாதம்!
  • பள்ளிக்கல்வி வரை தாய்மொழியில் அனைவருக்கும் தரமான கட்டாய இலவசக் கல்வி !
பெரும்பான்மை மக்களுக்கு எதிராக சதித்தனமாகக் கொண்டு வரப்படும் சட்டங்களை,
உத்தரவுகளை, தீர்ப்புகளை மக்கள் ஏற்றுக் கீழ்ப்படிய முடியாது
தொடர்புக்கு 9962366321

தொடர்புடைய பதிவுகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக