புதன், 4 ஜனவரி, 2017

எச் ஐ வியால் பாதிக்கபட்டவர்களுக்கு திருமண சுயம்வரம் .. குஜராத்தில் பல ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெறும் புரட்சி, ...



குஜராத்தில், எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கடந்த ஒன்பது ஆண்டுகளாக சுயம்வரம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
ஐ.நா.வின் எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் கண்காணிப்பு அமைப்பின்படி எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமுள்ள நாடுகளில், உலகளவில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது. அதாவது, உலகளவில் எச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 50 லட்சம். இவர்களில் 21 லட்சம் பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. சில ஆண்டுகள் முன்புவரை உலகின் மிகப்பெரிய உயிர்க்கொல்லி நோயாக எச்.ஐ.வி நோய் கருதப்பட்டது. இதனால் பலர் யிரிழந்துள்ளனர். இந்த நோய்க்கு,மருத்துவ ஆராய்ச்சிகள் காரணமாக சில மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இம்மருந்துகள் எய்ட்ஸ்நோயை முற்றிலும் குணப்படுத்திவிடாது என்றாலும், சில மருந்துகளை சரியாக எடுத்துக்கொள்ளும் பட்சத்தில் எய்ட்ஸ் நோயாளிகளின் வாழ்நாளை அதிகரிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக எய்ட்ஸ் நோயினால், இளம் தலைமுறையினரும் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். இதனால், அவர்களுக்கு திருமணம் செய்துகொள்வதில் தடை ஏற்படுகிறது. மேலும், எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்கள் சமுதாயத்திலிருந்து ஒதுக்கப்படுகின்றனர். இவர்களுக்கு சில சமூக ஆர்வலர்களும் தொண்டு நிறுவனங்களும் உதவிசெய்து வருகின்றன.
இந்நிலையில்ல், குஜராத்தை சேர்ந்த, ’Gujarat State Network of People’ என்ற தொண்டு நிறுவனம் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கடந்த 9 ஆண்டுகளாக சுயம்வரம் நடத்தி வருகின்றது. இதற்கு, ’ஜீவன்ஸாதி பஸந்த்கி மேளா’ என்று பெயர் வைத்துள்ளனர்.
இந்நிலையில் இந்த சுயம்வரத்தில் கலந்துகொள்ள சுமார் 400 எய்ட்ஸ் நோயாளிகள் பதிவு செய்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் பெண்களை விட, ஆண்கள் அதிகளவில் இருப்பதால், பெண்கள்தான் தங்களுக்கான மணமகனை தேர்ந்தெடுப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக