திங்கள், 30 ஜனவரி, 2017

கனடா மசூதியில் துப்பாக்கி சூடு: 5 பேர் பலி


கனடாவில் அமைந்துள்ள மசூதி இஸ்லாமிய கலாச்சார மையத்தில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடாவின், கியூபெக் நகரில் உள்ள இஸ்லாமிய கலாச்சார மையத்தில் நேற்று இரவு தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 5 பேர் பலியானதாகவும், பலர் காயமடைந்ததாகவும், தாக்குதல் நடந்த இஸ்லாமிய கலாச்சார மையத்தின் தலைவர் கூறினார். இந்த தாக்குதல் சம்பவத்தை அந்நாட்டு காவல்துறையினர் உறுதி செய்தனர். இந்த தாக்குதல் தொடர்பாக இரண்டு பேர் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளனர். லைவ்டே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக