திங்கள், 9 ஜனவரி, 2017

இந்திய பொருளாதாரத்திற்கு மரண அடி ! 35 வீத வேலை காலி ! 50 வீத வருவாய் காலி

35% வேலை இழப்பு (அதாவது மூன்றில் ஒருவருக்கு வேலை போய் இருக்கிறது) 50% வருவாய் இழப்பு. (அதாவது வருவாய் பாதியாய் குறைந்திருக்கிறது)
அனைத்திந்திய உற்பத்தியாளர்கள் அமைப்பு (All India Manufacturer's Organization - AIMO) செல்லாக் காசு நடவடிக்கையின் முதல் 34 நாட்களில் ஆய்வு நடத்தி சொல்லி இருப்பது கீழே.
35% வேலை இழப்பு (அதாவது மூன்றில் ஒருவருக்கு வேலை போய் இருக்கிறது)
50% வருவாய் இழப்பு. (அதாவது வருவாய் பாதியாய் குறைந்திருக்கிறது)
மார்ச் 2017- போல் இவையே
60% வேலை வாய்ப்பின்மையாகவும் (அதாவது மூன்றில் இருவருக்கு வேலை போகும்)
55% வருவாய் இழப்பாகவும் மாறும்
என்று சொல்லி இருக்கிறார்கள். AIMO மூன்று இலட்சத்திற்கும் மேலான சிறு, குறு மற்றும் இடைநிலை உற்பத்தியாளர்கள் கொண்ட கூட்டமைப்பு.
இந்தியாவில் 10 - 25 நபர்களுக்கு வேலைக் கொடுப்பவர்கள் இந்த நிறுவனங்கள் தான். இதில் தான் அதிகப்படியான மக்கள் வேலை செய்கிறார்கள். இங்கிருந்து job work எடுத்து தனியே வேலை செய்யும் நபர்களும் இருக்கிறார்கள். Developmental Economics என்பது சிறு,குறு, சிறிய & இடைநிலை நிறுவனங்களை வளர்ப்பது தான். இவர்களால் தான் பெருநிறுவனங்கள் வாழ்கிறது. இதையெல்லாம் விட்டு விட்டு Winners-take-all மனநிலையில் இந்தியாவின் டாப் 100 நிறுவனங்களுக்கு மட்டுமே அரசாங்கமே எடுபிடி வேலை செய்வது வேறு எந்த நாட்டிலும் நடக்காத ஒன்று.

பணமதிப்பிழப்பின் உண்மையான கோர முகம் இது தான். இது எதுவுமே தெரியாமல் மயிலாப்பூரில் உட்கார்ந்துக் கொண்டு பணமதிப்பு நீக்க சாதனைகள், வாய்ப்புகள் மற்றும் எதிர்கால இந்தியா என்று புத்தகம் போட்டு, டெல்லி அப்பளம் சாப்பிட புத்தகக் காட்சிக்கு வரும் மாமாக்களை நிற்க வைத்து கேள்விக் கேளுங்கள்.
வளர்ச்சி என்பது எல்லோருக்குமானது, எல்லாரையும் உள்ளடக்கியது மட்டுமே மோடி அரசு செய்து கொண்டிருப்பது க்ரோனி முதலாளித்துவம். இது தான் மத்திய அரசு முன்வைக்கும் ‘வளர்ச்சி’ என்றால், அந்த வளர்ச்சியும், அரசும், நாடும் நாசமாய் போகட்டும்.
தகவல்: இந்தியன் எக்ஸ்பிரஸ்  முகநூல் பதிவு நாராயண்  ராஜகோபாலன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக