புதன், 18 ஜனவரி, 2017

கீழடித் தொன்மையைக் காக்க மதுரையில் 22-ல் போராட்டம்- தமுஎகசஅழைப்பு

%e0%ae%a4-%e0%ae%ae%e0%af%81-%e0%ae%8e-%e0%ae%95-%e0%ae%9a-1%e0%ae%a4-%e0%ae%ae%e0%af%81-%e0%ae%8e-%e0%ae%95-%e0%ae%9a-3thetimetamil.com :தமிழரின் தொன்மைச் சான்றுகள் கிடைத்துள்ள கீழடித் தடத்தைப் பாதுகாக்கக்கோரி மதுரையில் வரும் 22ஆம் தேதி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் போராட்டத்தை நடத்துவதாக அறிவித்துள்ளது. இதில் ஏராளமானவர்கள் பங்கேற்குமாறு அவ்வமைப்பு அழைத்துள்ளது. இதில் தமி ழ்ப் பல்கலை. முன்னாள் துணைவேந்தர் திருமலை, இசையறிஞர் நா.மம்மது மற்றும் பலர் பங்கேற்கின்றனர்.
இது தொடர்பான தமுஎகசவின் மதுரை மாவட்ட அமைப்பின் அழைப்பு:
பல நூறு வருடங்களாய்த் தமிழர்கள் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் நாகரிக வரலாற்றைப் பறைசாற்றும் மதுரை அருகே உள்ள கீழடியில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்ட போது அங்கு சுமார் 2500 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் வரலாற்று பொக்கிஷம் கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 5300 பண்டைய பொருட்களும் அங்கே கண்டறியப்பட்டன.

காவிரிப் பூம்பட்டினம் அகழ்வாராய்ச்சிக்குப் பிறகு நாற்பது வருடங்கள் கழித்து இப்போதுதான் மத்திய தொல்லியல் துறை தமிழகத்தில் ஆய்வு நடத்தி இருக்கிறது. மத்திய தொல்லியல் துறையின் அகழ்விட அருங்காட்சியகம் இதுவரை நாற்பது இடங்களில் இருக்கிறது. ஆனால் ஒன்றே ஒன்றுதான் தமிழகத்தில், அதுவும் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் இருக்கிறது. கீழடியில் கண்டெடுத்தபொருட்களைப் பெங்களூருவுக்கு எடுத்துச் செல்ல முயன்றபோதே அதைத் தடுக்கக் குரல் கொடுக்கப்பட்டது. பெங்களூருவுக்கு எடுத்துச் செல்லப்பட்டால் இவையனைத்தும் அங்கே மைசூருவில் இருக்கும் குடோனில்தான் வைக்கப்படும். கீழடி ஆராய்ச்சிகள் பற்றி மக்களுக்குத் தெரிய வேண்டும் எனில், அந்த இடத்திலேயே அருங்காட்சியகம் வைப்பதுதான் சிறந்தது என்கின்றனர் தொல்லியல் அறிஞர்கள். அதற்காகத் தமிழக அரசு பல்வேறு கோரிக்கைகளுக்குப்பிறகு இடம் ஒதுக்க முன் வந்துள்ளது.
கீழடி ஆய்வில் 70-க்கும் மேற்பட்ட தமிழ் பிராம்மி எழுத்துக்கள், பிராகிருத மற்றும் சமஸ்கிருத எழுத்துக்கள் கிடைத்திருக்கின்றன. ஆப்கான் நாட்டின் சூது பவளமும், ரோமானிய மண்பாண்டமும்2500 ஆண்டு முன்பான தமிழ் பாரம்பரியத்தில் இருந்திருக்கிறது என்ற தகவல்கள் பல வணிக மற்றும் வரலாற்று ஆராய்ச்சிகளுக்குப் புதியதொரு பரிணாமத்தை வழங்குகின்றன.
இந்நிலையில் மேற்கொண்டு ஆய்வுக்குப் பணம் ஒதுக்கீடு செய்யாமல் இந்த ஆய்வை முடக்கமத்திய பாஜக அரசு முயல்கிறது. தமிழருக்கும், தமிழ்ப் பாரம்பரியத்துக்கும் பாஜக எப்போதும் விரோதமானது என்பதை இதன்மூலம் தொடர்ந்து நிரூபித்து வருகிறது. நமது வரிப்பணத்திலும்இயங்குகிற மத்திய தொல்லியல் துறை ஏன் கீழடி ஆய்வுக்குத் தொடர்ந்து பணம் தர மறுக்கிறது?
%e0%ae%a4-%e0%ae%ae%e0%af%81-%e0%ae%8e-%e0%ae%95-%e0%ae%9a-2மொகஞ்சதாரோ, அரப்பா நாகரிகத்துக்கு ஈடாகத் தென்னகத்திலும், அதிலும் குறிப்பாகச்சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மூதூர் மதுரையின் அருகில், வைகைக்கரையில் வளர்ந்துள்ள நாகரிகம் பற்றிய ஆய்வை மூடி மறைப்பதன் மூலம், தனது மதவெறி மயப்பட்ட ஒற்றைக் கலாச்சாரத் திணிப்புக்கு எதிராக
இருக்கின்ற பண்பாட்டுப் பாரம்பரியங்களை அழிக்க நினைக்கும் மதவெறி பாஜக-வின் சதித் திட்டங்களை முறியடிக்க மூதூர் மதுரையில் அணிதிரள்வோம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக