பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சாமி கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், சசிகலா பொதுச்செயலாளராவது குறித்து கருத்து கூற
முடியாது. அது உட்கட்சி விவகாரம். கட்சியை அவர் கைப்பற்றினாரா என்பது
குறித்து பல்வேறு கருத்துகளுக்கு தேர்தலில் தான் என்னுடைய பதிலை கூற
முடியும். அவர் முதல்வராக கூட ஆகும் வாய்ப்பு இருக்கிறது. திறமை இல்லை என
காங்கிரஸ்காரர்கள் கூறுகின்றனர். சோனியா எப்படி அரசியலுக்கு வந்தார்.
ஏதேனும் இருந்ததா?
1996ல் சசிகாலாவும், அவரது குடும்பத்தினரும் சதி செய்தது தொடர்பான
சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு ஜனவரிக்குள் வரும் என
எதிர்பார்க்கிறேன்.சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவிற்கு எதிராக தீர்ப்பு வந்தால் 2 ஆண்டு சிறை, 10 ஆண்டு அரசியலில் ஈடுபட முடியாது.
பணம் மதிப்பு நீக்க நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பும் ராகுல்
காந்தி, காங்கிரஸ் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும்போது ஏன் எதுவும்
செய்யவில்லை. இந்த அறிவிப்பில் மத்திய நிதி அமைச்சகம் உத்தரவுகளை
நிறைவேற்றவில்லை.
தமிழக பாஜக புதிய அமைப்பாக உருவாக்க வேண்டும் என்று வரும் 6, 7 ஆம்
தேதிகளில் நடைபெறும் தேசிய குழுவில் தெரிவிக்கப்படும். தற்போது தமிழகத்தில்
புதிய அரசியல் சூழ்நிலை உருவாகியுள்ளதால் பாஜக வித்யாசமான அரசியலை
முன்னெடுக்க வேண்டும். இத்தனை நாள் தமிழகத்தில் பாஜகவுக்கு ஒரு தொகுதி கூட
கிடைக்கவில்லை. எனவே வரவிருக்கும் செயற்குழுவில் புதிய அமைப்புகள் கொண்டு
வருவது குறித்து ஆலோசிக்க வேண்டும். மேலும் தமிழக பா.ஜ.,வில். புதிய தலைமை
தேவைப்படுகிறது.
ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக மாடுகள் வதைப்பு என்ற வாதம் ஏன்
மாட்டிறைச்சிக்கு சொல்லவில்லை. ஜல்லிக்கட்டிற்கு தடைப்போட முடியாது
என்பதையும் உச்சநீதிமன்றத்தில் என்னுடைய வாதத்தில் அழுத்தமாக
வைத்துள்ளதாகவும், நீதிமன்றம் நிபந்தனையுடன் கூடிய அனுமதி கொடுக்கும் என்று
நம்புவதாகவும் தெரிவித்தார்.
அருள்குமார்
nakkeeran
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக