ஞாயிறு, 15 ஜனவரி, 2017

ரோஹித் வேமுலா நினைவுதினம் .. 17 தேதி வீரமரண நாள்.. மாணவர் அமைப்பு தீர்மானம்


ஐதராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோகித் வெமுலாவின் நினைவு தினமான வரும் 17-ம் தேதியை வீர மரண நாளாக அனுசரிக்க மாணவர் அமைப்பு முடிவெடுத்துள்ளது. ரோகித் வெமுலா நினைவு தினம்: 17-ந்தேதி வீர மரண நாளாக அனுசரிக்க மாணவர்கள் முடிவு ஐதராபாத்; தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஐதராபாத் பல்கலைக்கழத்தில் ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டிருந்த ரோகித் வெமுலா என்ற மாணவர் பல்கலைக்கழகத்தில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதனால், மனமுடைந்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் தான் ஒரு தலித் என்பதால் பல்கலைக்கழக நிர்வாகம் தன்னிடம் பாகுபாடு காட்டியதாகவும் அவர் கடிதம் எழுதி வைத்திருந்தார்.

இந்த நிகழ்வு நாட்டையே உலுக்கியெடுத்தது. அந்த பல்கலைக்கழக மானவர்கள், பல தலித் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள், வெமுலாவின் மரணத்திற்கு காரணமாக இருந்ததாக கூறி அப்போதைய மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்ருதிமி இராணி பதவி விலக வேண்டும் என கடும் போராட்டங்கள் நடத்தினர். இந்நிலையில், ரோகித் வெமுலாவின் முதலாம் ஆண்டு நினைவு நாள் வரும் 17-ம் தேதி வருகிறது. அந்த நாள் வீர மரண நாளாக பல்கலைக்கழக வளாகத்தில் அனுசரிக்கப்படும் என மாணவர் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். அந்நிகழ்வில், வெமுலாவின் தாய், உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் மாட்டுக்கறி வைத்திருந்ததாக தாக்குதலில் பலியானவரின் சகோதரர் மற்றும் குஜராத்தில் பசு பாதுகாப்பு பேரவையினரால் தாக்கப்பட்ட தலித் இளைஞர்களும் பங்கேற்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் வெமுலாவின் மரணத்திற்கு நீதி கேட்டு, மாணவர்கள் பங்கேற்கும் பேரணியும் நடத்தப்படுவதாக அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக