ஞாயிறு, 8 ஜனவரி, 2017

16 பெண்கள் மீது பாலியல் பலாத்காரம் .. சதீஸ்கார் போலீசின் காமவெறி !

Human Rights Commission (NHRC) has found that 16 women were “prima facie victims of rape, sexual and physical assault by state police personnel in Chhattisgarh” in Bijapur distric< புதுடில்லி: சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த சில ஆண்டுகளில் போலீசாரால் பெண்கள் கற்பழிக்கப்பட்டுள்ளனர். மானபங்கபடுத்தப்பட்டு, தாக்கப்பட்டுள்ளதாக தேசிய மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் வெளியிட்ட செய்தி: இந்த கழ்பழிப்பு சம்பவங்கள், 2015 மற்றும் 2016ம் ஆண்டில் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களிடம் வாக்குமூலம் பெற அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் 20 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
அவர்களின் வாக்குமூலத்திற்காக காத்திருக்கிறோம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவ ரூ.37 லட்சம் ஏன் ஒதுக்கீடு செய்யக்கூடாது என மாநில அரசிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. கிராம மக்கள் பாதிப்பு: கற்பழிக்கப்பட்ட 8 பெண்களுக்கு ரூ.6 லட்சம், மானபங்கபடுத்தப்பட்ட 6 பெண்களுக்கு ரூ. 2 லட்சம், தாக்குதலுக்குள்ளான 2 பெண்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்க பரிந்துரை செய்யப்படும். 40க்கும் மேற்பட்ட போலீசார், பெண்களை தாக்கியதுடன், கூட்டு பலாத்காரம் செய்ததாக வெளியான தகவலை தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும் பல கிராம மக்கள் கடுமையாக தாக்கப்பட்டதுடன், அவர்கள் உடமைகள் திருடப்பட்டுள்ளன. இவ்வாறு அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. dinamalar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக