வியாழன், 22 டிசம்பர், 2016

Traffic Ramaswamy :தலைமை செயலாளராக சகாயத்தை நியமிக்குமாறு கோரிக்கை

Image may contain: 3 people, text
சமூக வலைதளங்களில் தலைமை செயலாளராக சகாயம் போன்ற நேர்மையானவர்களை நியமிக்க கோரி அதிகமான நபர்கள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள் .....!
நேற்று சென்னை அண்ணா நகரில் உள்ள தமிழக தலைமை செயலாளர் ராம்மோகன் ராவ் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதனால், அரிசியல் கட்சிகள் மற்றும் அரசு அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
மத்தியில் ஆளும் பா ஜ க அரசு தமிழகத்தை கைப்பற்ற எடுத்திருக்கும் சூழ்ச்சிதான் இந்த நடவடிக்கை என்று பரவலாக பேசப்பட்டு வந்தாலும் திடீரென்று இவ்வாறான நடவடிக்கை தற்போதைய அ தி மு க கட்சிக்கு  கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில் தமிழகத்தின் தலைமை செயலாளராக சகாயம் போன்ற நேர்மையானவர்களை நியமிக்க வேண்டும் என்று சமூக வலைதளவாசிகள் தங்கள் ஆதரவுக்கொடிகளை வலைதளம் முழுவதும் ஏற்றி வைத்திருப்பதைக் காணமுடிகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக