வியாழன், 22 டிசம்பர், 2016

மாட்டு மூத்திரம் நல்லது' என்று மோடி சொன்னால், 'மோடி மூத்திரம் அதைவிட நல்லது என்று கூறும் படித்த முட்டாள்கள்

keetru nandhan :பொதுமக்கள்: இந்தியாவைப் போலவே, வெனிசூலாவிலும் உயர் மதிப்பு கொண்ட நோட்டுக்களை (100 பொலிவர் நோட்டு) செல்லாது என அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மடுரோ கடந்த புதன்கிழமை அறிவித்தார். ஆனால், மூன்று நாட்கள்கூட அந்த அறிவிப்பு தாங்கவில்லை. காரணம் மக்களின் கொந்தளிப்பு. நாடு முழுவதும் கலவரம் வெடித்தது. இப்போது அதிபர் பின்வாங்கி, செல்லா நோட்டு அறிவிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளார். இந்தியாவில் மோடி அறிவித்து, 40 நாட்கள் கடந்துவிட்டது. மக்களிடம் எந்தவொரு கொந்தளிப்பையும் காணோம். வரிசையில் நிற்கும்போது வெளிப்படும் சின்ன சின்ன முணுமுணுப்புகள், வங்கி ஊழியர்களோடு ஏற்படும் வாக்குவாதங்களைத் தாண்டி, அரசுக்கு எதிராக மக்களிடம் எந்தவொரு அசைவும் இல்லை. விவசாயம், சிறுதொழில், வர்த்தகம், இயல்பு வாழ்க்கை என அனைத்தும் பெருமளவு பாதிக்கப்பட்டும், மக்கள் சொரணையற்று இருப்பது ஏன்?
(தொடரும்)


பொதுமக்கள் (3)
பாமரர்களின் நிலைதான் இப்படி என்றால், படித்த மேதாவிகளின் நிலை அதை விட மோசம்.
மோடி, ஜெயலலிதா போன்ற பாசிஸ்ட்களை தூக்கிப் பிடிப்பதில் இவர்களுக்கு நிகர் யாருமில்லை. IT நிறுவன ஊழியர்கள், டாக்டர்கள், அரசு ஊழியர்கள், இதர white collar job பார்ப்பவர்கள், வெளிநாடுகளில் செட்டிலான NRI-கள் எல்லாம் தேர்தல் காலத்தில் பேசிய பேச்சு அவ்வளவு சீக்கிரம் மறக்கக் கூடியவை அல்ல. குஜராத் வளர்ச்சி பற்றி மோடி குரூப் பரப்பிவிட்ட கட்டுக்கதைகள் அனைத்தையும் இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு சேர்த்த உண்மை விளம்பிகள் இவர்கள்தான்.
உண்மை என்ன என்பதை இவர்களாகவும் தேடி அறிவதில்லை. நம்மைப் போன்றவர்கள் விளக்கிச் சொன்னாலும் அதை ஏற்றுக் கொள்வதில்லை. 'எதை எடுத்தாலும் நொட்டை சொல்லும் உங்களைப் போன்றவர்களினால்தான் இந்தியா வல்லரசாக முடியவில்லை" என்று நம்மையே கடைசியில் குற்றவாளி ஆக்கி விடுவார்கள்.
ரூ.500, 1000 செல்லாது என்று மோடி அறிவித்த போது, இந்தியா வல்லரசாகி விட்டதாகவே பேசத் தொடங்கினார்கள். இப்போது கொஞ்சம் சுருதி குறைந்து, ஜனவரி 1 வரைக்கும் பொறுங்க சார் என்கிறார்கள்.
'மாட்டு மோத்திரம் குடித்தால் உடம்புக்கு நல்லது' என்று மோடி சொன்னால், 'மோடி மோத்திரம் அதைவிட நல்லது' என்று கிளம்பி விடும் இத்தகு புத்திசாலிகளை வைத்துக் கொண்டு நாம் என்ன தான் செய்வது?


ரூ.500, 1000 ஒழிப்பில் புலம்பியது போதும். மோடியைத் தோற்கடிக்க என்ன செய்யலாம் என்று யோசிக்கலாம்.
முதல் பிரச்சினை:
எல்லோரிடமும் ரூ.2000 நோட்டு மட்டுமே இருக்கிறது. யாரிடமும் சில்லறை இல்லை. எங்கேயும் பொருட்கள் வாங்க முடியவில்லை. வணிகர்களும், பொதுமக்களும் அவதிப்படுகிறார்கள். இது சில்லறை வணிகத்தை ஒழிக்கும் முயற்சி.
பரிந்துரை:
சில்லறை இல்லை என்பதற்காக Big Bazaar, Relieance Fresh போன்ற சூப்பர் மார்க்கெட்டுகளில் போய், Debit card / Credit card தேய்ப்பதை முதலில் நிறுத்துவோம். நாம் எப்போதும் பொருட்கள் வாங்கும், நமது வீட்டிற்கு அருகில் இருக்கும் கடைகளையே அணுகுவோம். மாதக் கணக்கு சீட்டு (monthly account card) போடச் சொல்லி, நமக்கான பொருட்களை வாங்குவோம். 2000 அல்லது 4000 ரூபாய் அளவுக்குப் பொருட்கள் வாங்கிய பின்பு, அதற்கான பணத்தைக் கொடுத்து, கணக்கை முடிக்கலாம்.
சில்லறை வணிகர்கள் தாங்கள் பொருட்கள் வாங்கும் மொத்த வணிகர்களிடம் இந்த முறையையே பின்பற்ற வேண்டும். பெரும்பாலான கிராமங்களிலும், சில நகர்ப்புறங்களி்லும் ஏற்கனவே இந்த நடைமுறை உண்டு. இதை எல்லா இடங்களிலும் விரிவுபடுத்துவோம். இதனால், சில்லறை வணிகர்களின் வியாபாரம் பாதிப்படையாமல் தொடரும்.
ஆண்டுக்கணக்கில் பரிச்சயமான நபர்களுக்கு மாதக் கணக்கு வைக்கலாம். புதிய நபர்களை நம்பி எப்படி கடன் கொடுப்பது?
அவர்களுக்கு கடன் கொடுக்க வேண்டாம். அதே நேரத்தில் சில்லறை இல்லை என்ற காரணத்திற்காக அவர்களை சூப்பர் மார்க்கெட்டுகள் பக்கம் தள்ள வேண்டாம். சுங்கச் சாவடிகளில் கொடுப்பது போன்ற கூப்பன் சிஸ்டத்தை (படம் பார்க்க..) வணிகர் சங்கங்கள் கொண்டு வர வேண்டும். ஒரு கடையில் சில்லறைக்காக கொடுக்கப்பட்ட கூப்பனை, இன்னொரு கடையில் பயன்படுத்த முடிய வேண்டும்.
வணிகர் சங்கங்களும், நாமும் இணைந்தால் இது சாத்தியமே.
(தொடரும்)
என் அறிவுக்கு எட்டிய செய்திகளைப் பகிர்கிறேன். தவறுகள் இருப்பின் சுட்டிக் காட்டுங்கள். எல்லாம் கூட்டு முயற்சிதானே..!  முகநூல் பதவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக