சனி, 31 டிசம்பர், 2016

எங்கள் வங்கி கணக்கை முடித்து கொள்கிறோம் ! எங்கள் முழுப்பணத்தையும் உடனே தரவும்! கீழக்கரையில் வங்கி முன் திரண்ட மக்கள் கூட்டம் !

ராமநாதபுரம் மாவட்டம், கீழ்கரையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முன்பாக திரண்ட மக்கள்,
"இந்த வங்கியில் உள்ள எங்கள் கணக்குகளை முடித்து கொள்கிறோம், அகவுண்டில் உள்ள எங்கள் பணம் மொத்தத்தையும் உடனே கொடுக்கவும்" என்று, வங்கி மேனேஜரிடம் மனு கொடுத்துள்ளார்கள்.
இதே போன்று ஒவ்வொரு ஊரிலும் உள்ள அனைத்து மக்களும் எல்லா வங்கி கிளைகளின் முன்பாக திரண்டு இதே போன்று தங்கள் வங்கி கணக்கை குளோஸ் செய்து, பணத்தை திருப்பி கேட்கவேண்டும். இது இந்தியா எங்கும் பரவ வேண்டும்.
நமது பணம், நாம் கேட்க உரிமை உள்ளது. கணக்கு முடிக்கப்பட்ட கணக்கில் உள்ள பணத்தை தரமறுக்கிறார்கள் என்று வங்கிகளின் மீது வழக்கும் தொடுக்க வேண்டும், இப்படி இந்தியா எங்கும் வழக்குகள் போடப்பட வேண்டும்.


நமது பணம்....! நமது உரிமை....!!  முகநூல் பதிவு 


தினகரன் : மும்பை: ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாட்டை ரிசர்வ் வங்கி தளர்த்தி உள்ளது. இதன்படி, நாளை முதல் (ஜன.1) ரூ.2,500 என்கிற தற்போதைய கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு தினசரி ரூ.4,500 எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கி ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கள்ளநோட்டு மற்றும் கருப்பு பணத்திற்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக உயர் மதிப்புக்கொண்ட பழைய ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் மோடி கடந்த 9ம் தேதி அறிவிப்பு வெளியிட்டார். இதன்தொடர்ச்சியாக வங்கிகளில் பணம் எடுப்பதற்கும், பழைய ரூபாய் நோட்டுக்களை டெபாசிட் செய்ய பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டன. பணம் எடுக்க நாள் ஒன்றுக்கு ரூ.4000 மட்டுமே அனுமதிக்கப்பட்டது. பின்னர் இந்தத்ெதாகை ரூ.2500 ஆக குறைக்கப்பட்டது.

போதிய அளவில் புதிய ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கப்படாததாலும், புதிய ரூ.500 நோட்டுக்கள் வங்கிகளுக்கு விநியோகம் செய்யப்படாததால் இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. மேலும், வங்கி ஏடிஎம்களில் ரூ.100 தாள்களை வைத்தால் சீக்கிரமே தீர்ந்து விடுகிறது. பலரும் புதிய ரூ.2000 நோட்டுக்களை எடுப்பதற்கு பதிலாக மொத்த தொகையையும் ரூ.100 ரூபாய் நோட்டுக்களாக ஏடிஎம்களில் எடுக்க துவங்கினர். இதனால் ரூ.100 நோட்டுக்களை விரைவில் தீர்ந்து விடுகிறது. இதன் காரணமாக பெரும்பாலும் ரூ.2,000 ரூபாய் மட்டுமே தினசரி எடுத்து வந்தனர்.

இந்நிலையில், செல்லாத நோட்டு அறிவிப்பின் ஒருபகுதியாக பழைய ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் டெபாசிட் செய்வதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து, ஏடிஎம்களில் பணம் எடுப்பத்தில் கட்டுப்பாடுகளை சற்றே ரிசர்வ் வங்கி தளர்த்தியுள்ளது. இதன்படி, வங்கி ஏடிஎம்களில் ஒரு கார்டில் தினசரி ரூ.4,500 எடுக்கலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு நாளை முதல் அமலுக்கு வருகிறது. அதேசமயத்தில் ஏடிஎம் உட்பட வாராந்திரம் பணம் எடுக்கும் அளவான ரூ.24,000 என்பதில்(சிறு வியாபாரிக்கு ரூ.50,000) எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பினால் மக்களின் சிரமம் ஓரளவு குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், அதற்கேற்ப போதிய அளவில் புதிய ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கப்பட்டுள்ளதா? அவ்வாறு அச்சடிக்கப்பட்ட நோட்டுக்கள் வங்கிகளுக்கு சமமாக பகிர்ந்து விநியோகம் செய்யப்படுமா என்பதை பொறுத்தே தினசரி ரூ.4,500 எடுப்பதில் என்ன சிக்கல் வரும் என்பது தெரியவரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக