செவ்வாய், 20 டிசம்பர், 2016

முதல்வரை முட்டிய குட்டி யானை காவேரி இறந்துவிட்டதாம் .. அதிகாரிகளிடம் அடிவாங்கிய பாகன் சாபம் கொடுத்தானாம்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முதுமலை யானைகள் முகாமில் வளர்ந்து வந்த குட்டி யானைக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா காவேரி என பெயர் சூட்டினார். இதையடுத்து, வந்த ஜூன் மாதம் முதல்வர் ஜெயலலிதா முதுமலை புலிகள் காப்பகத்தை பார்வையிடச் சென்றார். அப்போது குட்டி யானை காவேரி முதல்வருக்கு வரவேற்பு அளித்தது. முதல்வர் காவேரியை பாசத்தோடு தடவியபோது எதிர்பாராதவிதமாக முதல்வர் ஜெ.,யை தும்பிக்கையால் தள்ளிவிட்டது. அதற்குள் சுதாகரித்துக்கொண்ட பாதுகாப்பு படை வீரர் முதல்வரை தாங்கிப்பிடித்துக்கொண்டார். பயம் தெளியாமல் ஜெ., காரில் அமர்ந்து கொண்டார். அதன் பின்னர் நடந்ததுதான் அதிரடி என்கிறார்கள். முதல்வர் ஜெ., போனதும் அதிகாரிகள் பாகனை நையப்புடைத்து தாக்கியதாக கூறப்படுகிறது.
சில அதிகாரிகள் யானையையும் தாக்கியதாக கூறப்படுகிறது. அங்கிருந்த மற்ற பாகன்களும் இதை உறுதிபடுத்தியதாகவும் கூறுகிறார்கள். இதில் நொந்துபோன பாகன், அந்த அதிகாரிகளை சாபம் இட்டதாகவும் கூறப்படுகிறது. காவேரிக்கு காலில் புண் இருந்ததால் நடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தது. அதன்பின்னர் அந்த காவேரி யானையும் இறந்துவிட்டது. பாகன் எஙகிருக்கிறாரோ..!? முதல்வர் ஜெ., பெயரிட்ட அந்த யானை தற்போது இருந்திருந்தால் ஜெ.,மறைவுக்கு கண்ணீர் விட்டிருப்பதுடன்,தான் தள்ளிவிட்டதற்கும் வருந்தியிருக்கலாம்..! liveday லைவ்டே



vikatan : ஜெயலலிதா காவேரி யானை குட்டி முதல்வர் ஜெயலலிதாவை முட்டிய குட்டி யானை மரணம்!

ஊட்டி: தமிழக முதல்வர் ஜெயலலிதாவை முதுமலை புலிகள் காப்பகத்தில் வைத்து முட்டிய காவேரி என்ற குட்டி யானை உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முதுமலை யானைகள் முகாமில் வளர்ந்து வந்த 6 வயதான குட்டி யானைக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா காவேரி என பெயர் சூட்டினார். இதையடுத்து, கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல்வர் ஜெயலலிதா முதுமலை புலிகள் காப்பகத்தை பார்வையிடச் சென்றார்.
முதல்வர் ஜெயலலிதாவை முட்டிய குட்டி யானை மரணம்!

அப்போது குட்டி யானை காவேரி முதல்வருக்கு வரவேற்பு அளித்தது. அதன் பின்னர் சிறிது நேரத்தில், அங்கு கூடியிருந்த கூட்டத்தைப் பார்த்து மிரண்டு போன காவேரி முதல்வர் ஜெயலலிதாவை தனது துதிக்கையால் இடித்து தள்ளியது.

இந்நிலையில், சமீப நாட்களாக குட்டி யானை காவேரிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு இருந்தது. மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும், சிகிச்சை பலளனிக்காமல் அந்த யானை இன்று (4ஆம் தேதி) உயிரிழந்தது.4 Aug 2014

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக