வெள்ளி, 9 டிசம்பர், 2016

துணை நடிகை கொலை: பணத்திற்காக கொன்ற தோழி கள்ளக்காதலனுடன் கைது

Chennai TV serial actress murder case: 2 arrestசென்னை: செலவுக்கு பணம் கேட்டு தராத ஆத்திரத்தில் நடிகை ஜெயசீலியை அவரது தோழியே தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்து விட்டு, நகை, பணத்தை கொள்ளையடித்தது விசாரணையில் தெரியவந்தது.
சேலத்தை சேர்ந்தவர் தயாளன். இவருடைய மூத்த மகள் ஜெயசீலி, 45. துணை நடிகையான இவர், சிறு சிறு விளம்பரங்கள், டிவி சீரியல்கள் மற்றும் சினிமாவில் சிறிய வேடங்களில் நடித்து உள்ளார். இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. சென்னை சாலிகிராமம், காந்திநகர், பெரியார் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஜெயசீலி தனியாக வசித்து வந்தார். கடந்த 4ம்தேதி இரவு அவரது வீட்டின் உள்ளே ஜெயசீலி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
நிர்வாணமாக கிடந்த அவரது உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது.
துர்நாற்றம் வீசியதை அடுத்த அக்கம் பக்கத்தினர் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த விருகம்பாக்கம் போலீசார், ஜெயசீலியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை பற்றி விசாரணை நடத்திய போலீசார், ஜெயசீலி வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்லும் நபர்கள் யார்?, சம்பவத்தின்போது வந்தவர்கள் யார்? என்று அக்கம், பக்கத்தில் வசிப்பவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது ஜெயசீலி வீட்டுக்கு ஆட்டோவில் ஒரு ஆணும், பெண்ணும் அடிக்கடி வருவார்கள் என்பது தெரியவந்தது.
ஜெயசீலியிடம் செல்போனில் கடைசியாக பேசியது அவருடைய தோழியான மாங்காட்டை சேர்ந்த அசீனா என்ற ஜூனத்பேகம், என்பது தெரியவந்தது. அவரை பிடித்து போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார்.
இதன் மூலம் அவர்தான் ஜெயசீலியை கொன்றார் என்பது உறுதியானது. ஜெயசீலியை தனது கள்ளக்காதலன் சிராஜூதீன் என்பவருடன் சேர்ந்து கழுத்தை நெரித்துக்கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அசீனா, மற்றும் நண்பர் சிராஜூதீன் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
ஜெயசீலி சிறு, சிறு விளம்பரங்கள் மற்றும் தமிழ் திரைப்படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்துக்கொண்டும், இன்ஸ்சூரன்ஸ் முகவராகவும் பணிபுரிந்து வந்தார். அசீனாவும், சினிமாவில் அத்தை, அக்கா உள்ளிட்ட பல்வேறு சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்து உள்ளார். இதனால் ஜெயசீலியும், அசீனாவும் நெருங்கிய தோழிகளாக இருந்து உள்ளனர்.
அசீனாவுக்கு ஏற்கனவே திருமணமாகி 3 பிள்ளைகள் உள்ளனர். அவருடைய கணவர் அசீனாவை விட்டு பிரிந்து சென்று விட்டார். அசீனா மட்டும் தனியாக தனது பிள்ளைகளுடன் மாங்காட்டில் வசித்து வந்தார். அப்போது அவருக்கு, அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் சிராஜூதீனுடன் பழக்கம் ஏற்பட்டது. அவருக்கும் ஏற்கனவே திருமணமாகி அதே பகுதியில் தனியாக வசித்து வருகிறார். அசீனாவை படப்பிடிப்பு மற்றும் தெரிந்தவர்கள் வீட்டுக்கு தனது ஆட்டோவில் சிராஜூதீன் அழைத்து சென்று வந்தார். இதனால் அவர்களுக்கு இடையே இருந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
அசீனா வீட்டுக்கு செல்லும் சிராஜூதீன் அங்கு பிள்ளைகள் இருப்பதால் இருவரும் உல்லாசமாக இருப்பதற்கு தடையாக இருந்தது. இதனால் இருவரும் அடிக்கடி ஜெயசீலி வீட்டுக்கு சென்று சந்தோசமாக இருப்பார்கள். தனக்கு தெரிந்தவர்கள் யாராவது இதுபோல் உல்லாசமாக இருக்க வேண்டும் என்று ஜோடியாக வந்தால் அவர்களுக்கு தனது வீட்டில் அடைக்கலம் கொடுப்பார் என்றும், இதன் மூலம் அவருக்கு வருமானம் வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஜெயசீலி எப்போதும் அவரது கழுத்தில் அதிக அளவில் நகைகள் அணிந்து இருப்பார் என்றும் கூறினார் அசீனா.
அசீனாவுக்கு தனது குழந்தையின் மருத்துவ செலவுக்கு அதிக அளவில் பணம் தேவைப்பட்டது. அவர் தனது தோழி ஜெயசீலியிடம் மருத்துவ செலவுக்கு பணம் கேட்டார். அதற்கு ஜெயசீலி, தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறிவிட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அசீனா, ஜெயசீலியை கொலை செய்து விட்டு அவரிடம் இருக்கும் நகை, பணத்தை கொள்ளை அடிக்க முடிவு செய்தார்.
டிசம்பர் 4ம் தேதியன்று ஜெயசீலிக்கு போன் செய்த அசீனா, தான் அங்கு வந்து கொண்டிருப்பதாக கூறினார். சிறிது நேரத்தில் அசீனா, சிராஜூதீன் இருவரும் ஆட்டோவை தெருவின் ஓரமாக நிறுத்தி விட்டு ஜெயசீலி வீட்டுக்கு சென்றனர். வழக்கம்போல் 3 பேரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தினர். இதில் போதை தலைக்கேறியதும் ஜெயசீலி கட்டிலில் படுத்துக்கொண்டார். பின்னர் இருவரும் சேர்ந்து துப்பட்டாவால் ஜெயசீலியின் கழுத்தை நெரித்தும், தலையணையை அவரது முகத்தில் வைத்து அழுத்தியும் கொலை செய்தனர். அசீனா , சிராஜூதீன் ஆகிய இருவரும் ஜெயசீலி அணிந்து இருந்த 10 பவுன் நகைகளை கொள்ளையடித்தனர்.
ஜெயசீலி, பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டதாக போலீசாரை நம்ப வைக்க அவரது உடலில் இருந்த ஆடைகளை கழற்றி விட்டு அவரை நிர்வாணமாக படுக்க வைத்தனர். வீட்டில் துர்நாற்றம் வீசாமல் இருக்க ஒரு வித வாசனை திரவியத்தை தெளித்தனர். பின்னர் வீட்டின் மரக்கதவை லேசாகவும், இரும்புக்கதவை வெளிப்புறமாகவும் பூட்டி விட்டு யாருக்கும் தெரியாமல் வெளியே சென்று ஆட்டோவில் ஏறி தப்பிச்சென்றனர்.
ஜெயசீலி வீட்டுக்கு வருவதாக முன்கூட்டியே செல்போனில் பேசி தகவல் கூறியதால் அசீனா போலீசாரிடம் சிக்கிக்கொண்டார் ஜெயசீலியை எப்படி கொலை செய்தோம்? என்பதை இருவரும் அந்த வீட்டில் போலீசாரின் முன்பு நடித்துக் காட்டினர். அதனை போலீசார் வீடியோ பதிவு செய்து கொண்டனர். பின்னர் கைதான இருவரிடம் இருந்தும் 10 பவுன் நகையை பறிமுதல் செய்த போலீசார், அவர்களை சிறையில் அடைத்தனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக