வியாழன், 29 டிசம்பர், 2016

அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டுள்ளார் . பன்னீர்செல்வம் தீர்மானத்தை போயஸ் கார்டன் சென்று சின்னம்மாவிடம் ஒப்படைத்தார்

அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி மண்டபத்தில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. அதிமுக அவைத்தலைவர் மதுசூதணன் தலைமையில் பொதுக்குழு நடைபெற்றது. சசிகலா தலைமையில் விசுவாசத்துடன் பணியாற்றுவோம் என்று அதிமுகவின் தலைமை பொறுப்பை சசிகலாவிடம் ஒப்படைத்து தீர்மானத்தை ஓ.பி.எஸ். முன் மொழிய, உறுப்பினர்கள் அனைவரும் வழிமொழிந்தனர். அதிமுகவின் புதிய பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்படும் வரை அதிமுகவின் பொறுப்பை சசிகலா வகிப்பார் என்று முடிவெடுக்கப்பட்டு அது பொதுக்குழுவில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நகலை எடுத்துக்கொண்டு போயஸ்கார்டனில் சசிகலாவை பார்க்கச் சென்ற ஓ.பி.எஸ். செய்தியாளர்களிடம் பேசியபோது, அதிமுக விதிகளுக்கு உட்பட்டு பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்தார்.நக்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக