வியாழன், 29 டிசம்பர், 2016

அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது .. சின்னம்மா பொது செயலராக தடையேதும் இல்லை?

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு முதல்முறையாக அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரி கல்யாண மண்டபத்தில் நடைபெற்றுவருகிறது. இந்த பொதுக்குழு மேடையில், முதல்வர் பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி, தங்கமணி, மதுசூதன், தம்பிதுரை, அன்வர்ராஜா, சரோஜோ ஆகியோர் அமர்ந்துள்ளனர். காலை 9.30 மணிக்கு தொடங்கிய இந்த பொதுக்குழு கூட்டத்தில், செய்தித்தொடர்பாளர் பொன்னையன் கண்ணீருடன் பேசத்தொடங்கினார். இதனைத்தொடர்ந்து கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்களும் மேடையில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் படத்திற்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

சென்னை: அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், சென்னையில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. இந்த கூட்டத்தில் சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட இருக்கிறார். அதிமுக பொதுச் செயலாளராகவும், தமிழக முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த 5ம் தேதி காலமானார். ஜெயலலிதாவின் மறைவை தொடர்ந்து காலியாக உள்ள கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கு, ஜெயலலிதாவின் தோழி சசிகலாவை தேர்ந்தெடுக்க கட்சியின் முன்னணி தலைவர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதிமுகவில் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டுமானால் கட்சியின் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி அதற்கு பொதுக்குழுவில் ஒப்புதல் பெற வேண்டும்.


இதையொட்டி அதிமுக. செயற்குழு, மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் தொடங்கியது.
முதலில் ஜெயலலிதா மறைவுக்கு எழுந்து நின்று இரங்கல் தெரிவித்தனர். செயற்குழு கூட்டத்தில் ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

சசிகலாவை பொதுச் செயலாளராக்கும் தீர்மானமும் கொண்டு வரப்படுகிறது. செயற்குழு கூட்டத்திற்கு பிறகு பொதுக்குழு கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் பெறப்பட உள்ளது.
தேர்வு நடைமுறை முடிவடைய 2 வாரங்கள் ஆகும்.  கட்சியின் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், அணிகளின் செயலாளர்கள், நகர, ஒன்றிய செயலாளர்கள் ஆகியோர் மட்டுமே பொதுக் குழு கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
இந்த கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் என 3 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர். இதையடுத்து திருமண மண்டபத்திற்கு பலத்த போலீஸ் காவல் போடப்பட்டுள்ளது.
tamiloneindia

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக