வியாழன், 1 டிசம்பர், 2016

மதனின் வீட்டில் ஏராளமான பணம் சிக்கியது .. ஆவணங்கள் எரிப்பு ! ஆனாலும் இவரை பாஜக கைவிடாது?

லட்சக்கணக்கில் பணம் பதுக்கல்திருப்பூர்: வேந்தர் மூவிஸ் மதன் கடந்த மே மாதம் 27ம் தேதி கடிதம் எழுதி வைத்து விட்டு திடீரென தலைமறைவானார். அவர், எஸ்ஆர்எம் மருத்துவக்கல்லூரியில் மாணவர்களை சேர்ப்பதாகச் சொல்லி ரூ.84 கோடி வரை வசூலித்து ஏமாற்றியது தெரியவந்தது. ஆனால் வசூல் செய்த பணத்தை எஸ்ஆர்எம் வேந்தர் பச்சமுத்துவிடம் கொடுத்து விட்டதாக அந்தக் கடிதத்தில் கூறியிருந்தார்.
இது குறித்து நீதிமன்ற உத்தரவுப்படி எஸ்ஆர்எம் வேந்தர் பச்சமுத்து மதனின் நண்பர்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் மதன் மட்டும் தலைமறைவாக இருந்தார்.
இந்தநிலையில், மதன் மணிப்பூரில் தலைமறைவாக இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதே நேரத்தில் மதன் மணிப்பூரில் இருந்து திருப்பூர் சென்று விட்டதாகவும், அங்கு அவரது வீட்டில் பதுங்கியிருப்பதாகவும் போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதனால் தனிப்படை போலீசார் திருப்பூர் விரைந்து சென்று மதனை கைது செய்தனர். பின்னர் அவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

அவரை மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் 7 நாள் காவலில் எடுத்து விசாரணையை தொடங்கினர். விசாரணையில் தற்போது சினிமாவில் இருக்கும் பிரபலங்களிடம் பணத்தை கொடுத்திருப்பதாகவும் தெரிவித்தார். சில சினிமா தயாரிப்பாளர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். எஸ்ஆர்எம் வேந்தர் பச்சமுத்துவிடமும் போலீசார் நேற்று முன்தினம் விசாரணை நடத்தினர். அதன்பின் மதன் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். மதனை மேலும் 2 நாள் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி அளித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

லட்சக்கணக்கில் பணம் பதுக்கல்

செவ்வாய்கிழமையன்று இரவு மீண்டும் மதனிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது திருப்பூரில் வர்ஷாவின் வீட்டில் பணம் பதுக்கி வைத்திருப்பதாக போலீசில் மதன் தெரிவித்தார். நேற்று அதிகாலை 4 மணிக்கு மதனை போலீசார் திருப்பூர் அழைத்துச் சென்றனர். அங்கு வர்ஷாவின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். சோதனையில் பல லட்சம் ரூபாய் சிக்கியதாக கூறப்படுகிறது.

இருசக்கர வானம்

கடந்த ஜூலை மாதம் இறுதியில் மதனுக்காக ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான மோட்டார் சைக்கிள் ஒன்றை வர்ஷா தனது பெயரில் வாங்கியதாக தெரிகிறது. இந்த மோட்டார் சைக்கிள் கடந்த ஜூலை மாதம் 27ம் தேதி தான் திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரகசிய அறை

ரகசிய அறை
அதன்பிறகு மதன் தான் திட்டமிட்ட படி வர்ஷாவின் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது மதன் பதுங்குவதற்கு வசதியாக அந்த பங்களாவில் செப்டம்பர் மாதம் வடமாநில தொழிலாளர்களைக் கொண்டு அலங்கார வேலை நடந்துள்ளது. அப்போது தான், மதன் பதுங்குவதற்கான ரகசிய இடத்தை தனது வீட்டில் வர்ஷா அமைத்ததாக கூறப்படுகிறது.
சொகுசு கார்

சொகுசு கார்

மதன் கடந்த செப்டம்பர் மாதம் ரூ.18 லட்சம் மதிப்பிலான சொகுசுகார் ஒன்றை வர்ஷா பெயரில் வாங்கியுள்ளார். அந்த காரும் திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 20ம்தேதி வர்ஷா பெயரிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளது.

வேறு ஊருக்கு தப்பி செல்ல திட்டம்வேறு ஊருக்கு தப்பி செல்ல திட்டம்

இதற்கிடையே அந்த பங்களாவில் மதன் தங்கி இருந்த நேரத்தில், திருப்பூரில் இருந்து அவர் வேறு ஊருக்கு தப்பி செல்ல திட்டமிட்டு இருந்ததாக தெரிகிறது. இதற்காக அவர், பாபநாசம் போன்ற சில திரைப்படங்களை பார்த்து, சென்னையில் இருந்து வெளிமாநிலங்களில் எங்கெங்கு செல்வது? எவ்வாறு செல்வது? எங்கு தங்குவது? பின்னர் அங்கிருந்து எங்கு செல்வது? என்பது போன்று முன்பே திட்டமிட்டு இருக்கிறார்.

திட்டமிட்ட மதன்

திருப்பூரில் தங்கி இருந்த மதன், வர்ஷாவின் வீட்டில் இருந்த நோட்டில், எங்கு செல்வது? எங்கு தங்குவது போன்ற தனது திட்டத்தை எழுதி இருந்ததாக தெரிகிறது. அந்த குறிப்பில் ஒவ்வொரு ஊருக்கு கீழும் அம்புக்குறி போட்டு குறித்துள்ளார். அதுபோல் திருப்பூர் என்று எழுதப்பட்டு இருந்ததற்கு கீழும் அம்புக்குறி போட்டுள்ளார். இந்த நோட்டை போலீசார் கைப்பற்றியுள்ளதாக தெரிகிறது.

ஆவணங்கள் எரிப்பு

ஆவணங்கள் எரிப்பு
முகநூலை முடக்கிய வர்ஷாமதன் திருப்பூரில் தங்கியிருப்பதாக போலீசாருக்கு சந்தேகம் வரவே அவர்கள் கடந்த வார இறுதியில் திருப்பூருக்கு வந்து விசாரணை நடத்த தொடங்கி உள்ளனர். போலீசார் வந்ததை அறிந்த மதன், தான் எழுதி வைத்து இருந்த குறிப்புகள், தான் வெளிமாநிலங்களுக்கு சென்று வந்ததற்கான ஆவணங்களை கிழித்து போட்டுள்ளார். தனது செல்போன் எண்களை போலீசார் கண்டுபிடிக்காமல் இருக்க அவர் ஏராளமான சிம்கார்டுகளையும் பயன்படுத்தியுள்ளார். வீட்டின் பின்பகுதியில் போட்டு, தீவைத்து எரித்துள்ளார். ஆனால் அவற்றில் சில குறிப்புகள் எழுதி இருந்த தாள்களும், சிம்கார்டு கவர்களும் முழுவதும் எரியாமல் கிடந்தன.

முகநூலை முடக்கிய வர்ஷா

மதனை அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தியதை அடுத்து நேற்று வர்ஷா வீட்டில் உள்ளவர்கள் யாரும் வெளியே வரவில்லை. மதனின் தோழி வர்ஷா தனது முகநூல்(பேஸ்புக்) கணக்கை அழித்து விட்டார். அதுபோல் வர்ஷாவின் துணிக்கடையும் திறக்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. விசாரணைக்குப் பிறகு மாலையில் அவர் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். சென்னையில் அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.  tamiloneindia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக