செவ்வாய், 20 டிசம்பர், 2016

துருக்கிக்கான ரஷ்ய தூதர் அண்ட்ரிவ் கொலோவ் சுட்டுக் கொலை

துருக்கிக்கான ரஷ்ய தூதர் அண்ட்ரிவ் கொலோவ் சுட்டுக் கொலைதுருக்கிக்கான ரஷ்ய தூதர் அண்ட்ரிவ் கொலோவ் சுட்டுக் கொலை அங்காரா : துருக்கி தலைநகர் அங்காராவில் மர்மநபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் அந்நாட்டிற்கான ரஷ்ய தூதர் அண்ட்ரிவ் கொலோவ் கொல்லப்பட்டார். அங்காராவில் நடைபெற்ற சமகால கலை தொடர்பான கண்காட்சியின் தொடக்க விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அண்ட்ரிவ் நேற்று சென்று இருந்தார். அப்போது நிகழ்ச்சியின் நடுவே திடீரென மர்மநபர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டார். இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த அண்ட்ரிவ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் இதில் 3 பேர் படுகாயமடைந்தனர்.
அந்த மர்மநபர் துப்பாக்கியால் 8 ரவுண்ட்கள் சுட்டதாகவும், மருத்துவமனையில் அண்ட்ரிவ் பலியானதாகவும் ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. போலீசார் நடத்திய பதில் தாக்குதலில் மர்மநபர் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. போலீஸ் அடையாள அட்டையுடன் கூட்டத்தில் புகுந்து, மர்மநபர் துப்பாக்கி சூடு நடத்தியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.   maalaimalar,com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக