வெள்ளி, 9 டிசம்பர், 2016

தென் ஆபிரிக்கா தமிழர் .. தன்மனைவியை ட்ராக்கிங் மூலம் கண்டுபிடித்து சுட்டு கொன்றார்

கொலைசெய்யவேண்டும் என்ற முடிவோடு அலைந்து திரிந்த தமிழர் ஒருவர், தனது முன் நாள் மனைவியின் காரில் ரக்கர் போனைப் பொருத்தியுள்ளார். பின்னர் மோபைல் போன் கம்பெனிக்கு போன் எடுத்து குறித்த மோபைல் போன் எங்கே உள்ளது என அறிந்து அவ்விடம் சென்று. தனது முன் நாள் மனைவியை கொலைசெய்துள்ளார் என்ற விடையம் பெரும் பரபரப்பை தோற்றுவித்துள்ளது. டயறோன் பிள்ளை என்னும் 31 வயது தமிழர், தனது முன் நாள் மனைவியான அனுலினி பிள்ளை என்னும் தமிழ் பெண்ணை சுட்டுக் கொலை செய்துள்ளார் என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. சம்பவ தினமான நேற்று முன் தினம் அனுலினி திடீரென தனது அம்மாவுக்கு தொலைபேசி அழைப்பை விடுத்து. தனது முன் நாள் கணவர் வந்துள்ளதாகவும் அவர் தன்னை அடித்து கொடுமைப்படுத்துவதாகவும். உடனே தன்னை வந்து காப்பாற்றுமாறும் கதறியுள்ளார்.


இதனை அடுத்து பெற்றோர் உடனே பொலிசாருக்கு அறிவிக்க பொலிசார் அவரது வீட்டை நோக்கி விரைந்துள்ளார்கள். இதேவேளை பெற்றோரும் புறப்பட்டுச் சென்றுள்ளார்கள். ஆனால் அதற்கு முன்னதாகவே தனது துப்பாக்கியால் சுமார் 5 தவடை அவரைச் சுட்டுக் கொன்றுவிட்டு, டயறோன் பிள்ளை தப்பிச் சென்றுவிட்டார் என்று அறியப்படுகிறது. டயறோன் தென்னாபிரிக்காவில் ஒரு நகரில் பெரும் பிஸ்தா என்று கூறப்படுகிறது. அவர் பெரும் அடாவடியில் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடும் நபர். துப்பாக்கிகளையும் வைத்திருந்துள்ளார். இன் நிலையில் கடந்த 10 வருடமான அனுலினியை அவர் கல்யாணம் கட்டி , கொடுமைப்படுத்தி வந்துள்ளார். அதிர்வு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக