புதன், 28 டிசம்பர், 2016

தீபா மதம் மாறியதால் ஜெயலலிதா அவரை சந்திக்கவும் பேசவும் மறுத்தார் .. முழுப்பெயர் தீபா பட்ரிக்

ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபாவை ஜெயலலிதா கடைசி காலம் வரை கண்டுகொள்ளவில்லை. சசிகலா குடும்பத்தினராலும் விரட்டப்பட்டார். ஆனாலும் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, மருத்துவமனை வாசலில் மக்களோடு மக்களாக வந்து நின்று அவமானப்பட்டு, ரத்த சொந்தம் என்பதை நிரூபித்தார். இந்நிலையில் தீபாவை ஜெயலலிதா ஒதுக்கியதற்கு இது தான் காரணம் என ஒரு தகவல் கச்சை கட்டி கிளம்பியுள்ளது.
அதாவது தீபா திருமணம் செய்தது ஒரு கிறிஸ்தவரை. அவர் பெயர் பேட்ரிக். இதனால் தீபா, தீபா பேட்ரிக் ஆகிவிட்டார் என அவருக்கு எதிர் தரப்பினர் கருத்து கூறி வருகின்றனர். ஆனால் தான் எல்லா மதத்திற்கும் பொதுவானவள். அதனால் தான் கிறிஸ்துமஸ் வாழ்த்து சொன்னேன். ரம்ஜானிற்கும் வாழ்த்து சொல்வேன் என விளக்கம் அளித்துள்ளார் தீபா. இவரது திருமணத்திற்கு ஜெயலலிதா செல்லவில்லை. தீபா கிறிஸ்தவராக மாறியதாலேயே இவரது திருமணத்திற்கு ஜெயலலிதா செல்லவில்லை என யூகிக்கப்படுகிறது. அதே நேரம் ஜெயலலிதா கிறிஸ்தவர்களை பெரிதும் மதித்து வந்தார். அதன் காரணமாகவே அதிமுகவிற்கு திமுகவை விட கிறிஸ்தவ வாக்காளர்கள் அதிகம் இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.  laivde


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக