புதன், 7 டிசம்பர், 2016

சோவுக்கு நெட்டில் அருச்சனை : தமிழ் மீதும் தமிழர்கள் மீதும் திராவிடர் என்ற சொல்லின் மீதும் உள்ள குரோதம் இறுதி வரை மாறவே இல்லை

முகநூல் பதிவுகள் :
1) பெரியார் திடலுக்குள் நுழைந்து அய்யா வாழ்ந்த அறைக்குள் வேண்டுமென்றே சிகரெட் பிடித்த அநாகரீகன்,
2)திடலுக்குள் வந்து பூணூலை வெளியில் இழுத்துவிட்டு 'நான் பூணூல் போட்ட பிராமணன்' என சொன்ன சனாதன வெறியன்,
3)விடுதலைப்புலிகளை தொடர்ந்து இழிவுபடுத்தி வந்த இன எதிரி,
4) தமிழர்கள் உணர்வுகளை காலில் போட்டு மிதிக்கவே துக்ளக் எனும் பத்திரிக்கையை நடத்திவந்த தமிழின பகைவன்,
5)இட ஒதுக்கீட்டிற்கு எதிரான சமத்துவ விரோதி,
6) பெண்கள் ஆண்களுக்கு சமமானவர்கள் அல்லர் (பார்ப்பன பெண்கள் உட்பட)என வெளிப்படையாக பேசிவந்த பெண்ணின எதிரி,
7) இவன் தந்தை சாராய உடையாரின் அறக்கட்டளை தலைவனாக இருந்ததால் எரிசாராய ஊழல் குறித்து வாய் திறக்காமல் இருந்த கபட வேடதாரி,
8) சங்கர மட ஊழல் குறித்து எழுத மாட்டேன் அது நான் மதிக்கும் இடம் என பேசிய போலி ஊழல் எதிர்ப்பாளன்,
9) சங்கராச்சாரி மீதான கொலை வழக்கு குறித்து கருத்து சொல்லாத புரட்டு நடுநிலைவாதி,
இன்னும் எவ்வளவோ.................
இவன் இழவுக்கு நாகரீகமாக பேச அறிவுரை வழங்கும் நண்பர்களே,
இவனுக்கு மரியாதை செலுத்தினால்தான் மனித நேயர் பட்டமும், நாகரீக மனிதர் பட்டமும் கொடுப்பீர்கள் என்பது எவ்வகையில் நியாயம் ?
தேவநாதன் தீனதாயளன் இருவரையும் பற்றிய துணுக்கு கூட போடதா உண்மையை உரைப்பவன் நடிகர்கள் கூறிய பெயர் உண்மையை தவிர வேறுஏதும் பேச மாட்டார் என விளம்பியது!


சோ.ராமசாமி அளவிற்கு ஒரு பத்திரிக்கையை, எழுத்தை தனி மனித தாக்குதல்களுக்கும் திட்டமிட்ட துதிபாடலுக்கும் வேறு யாரும் பாவித்தியிருப்பார்களா என்று தெரியவில்லை. துக்ளக் பத்திரிக்கையின் வழியே அவர் பிறழ்வான வாசக மனங்களை தமிழகத்தில் உருவாக்கினார். அரசியல் சாக்கடையாகிவிட்டது, அசுத்தமாகி விட்டது என்ற அருவருப்பை திரும்ப திரும்ப புலம்பியபடி நிலைநாட்ட விரும்பினார். எதிலும் ஒரு நிலையில்லாமல், அனைவரிடமும் நட்பு எனும் ஒரு மாயையை உருவாக்கினார். அரசியல் சஞ்சிகை வாசிப்பை ஒரு போதை பண்டமாக மாற்றியதில் முன்னோடி.
என் ஆழந்த இரங்கல்கள்.  முகநூல் பதிவுகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக