போயஸ்கார்டன் இல்லத்தில் ஜெ. இறுதிச்சடங்கு!
முதல்வர் ஜெயலலிதா( வயது 68) இன்று(5.12.2016) இரவு 11.50 மணிக்கு காலமானார் என்று அப்பல்லோ நிர்வாகம் அறிவித்துள்ளது. பொதுமக்களின் அஞ்சலிக்காக முதல்வரின் உடல் ராஜாஜி ஹாலில் வைக்கப்படுகிறது. இதனால் அவரது உடல் ராஜாஜி ஹாலுக்கு எடுத்துச்செல்லப்படுகிறது.
முன்னதாக போயஸ்கார்டன் வேதா இல்லத்தில் முதல்வரின் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது. இதற்காக ஜெயலலிதா வழக்கமாக பயன்படுத்தும் கார் அப்பல்லோ வாசலில் தயார் நிலையில் உள்ளது. ஜெ. வாகனத்திற்கு முன் செல்லும் பைலட் கார் மற்றும் சில சொகுசு கார்களும் தயார் நிலையில் உள்ளன. நக்கீரன்.இன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக