வியாழன், 22 டிசம்பர், 2016

நிதித்துறை சண்முகத்தை பின்தள்ளி கிரிஜா தலைமை செயலாளர் ... கார்டன் எபிசொட்... போயசில் புகுந்த பாஜக?

தமிழக அரசியலில் பல திடீா்,திடீா் மாற்றங்கள் ஏற்படுகிறது. இது புதியது அல்ல இருந்தாலும் பல முடிவுகள் நள்ளிரவில்தான் எடுக்கப்படுகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்னா் முதல்வா் பன்னீா்செல்வம் டெல்லிக்கு சென்றார். அதற்கு முன்னா் கவனா்னரை சந்தித்து பேசிய பின்னரே டெல்லிக்கு சென்றார். அவருடன் சாந்தஷீலா நாயர், தலைமை செயலாளா் ராமமோகன ராவ் உள்ளிட்டோர் சென்றனா். பிரதமரை சந்தித்தபோது பிரதமா், முதல்வா் பன்னீா்செல்வத்திடம் 5 நிமிடம் தனியாக பேசினார். என்ன பேசினார்? ஏது பேசினார் என்று யாருக்கும் தெரியாது. இந்த நிலையில் பிரதமரை சந்திக்க சென்ற தலைமை செயலா் ராமமோகனராவ் வீட்டில் வருமானவரித்துறை அதிரடி சோதனை நடத்தியது. சோதனைகள் பல ஐ.ஏ.எஸ் அதிகாரிகளிடமும் தொடரும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் இரவு 10 மணி அளவில் தனியாக காரில் சில போலீசார் பாதுகாப்புடன் போயஸ் கார்டனுக்கு முதல்வா் ஓபிஎஸ் சென்றார். இந்த சந்திப்பு அதிகாலை 4 மணிநேரம் வரை நீடித்ததாக கூறப்படுகிறது.
இந்த சந்திப்பின் போது புதிய தலைமை செயலாளராக நியமனம் செய்ய சசிகலா தரப்பில் சிலரை கூறப்பட்டதாம். இதனை ஏற்க மறுத்து முதல்வா் ஓபிஎஸ் மத்திய அரசு கூறிய ஐஎஎஸ் அதிகாரியை தோ்வு செய்வதாக கூறினாராம். இதனால் கார்டனில் இருவருக்கும் மனஸ்தாபம் வந்ததாகக்கூட கூறப்படுகிறது. இறுதியில் நிதித் துறை செயலாளா் சண்முகம் முன்னணியில் இருக்க பாரதிய ஜனதா மற்றும் அதிமுகவினரால் ஏற்றுக் கொள்ளும் நிலையில் இருந்த கிரிஜா வைத்தியநாதன் ஏற்றுக் கொள்ளப்பட்டார். இதில் ஓபிஎஸ்சின் கையே ஓங்கி இருந்ததாக கார்டன் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. லைவ்டே.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக