திங்கள், 12 டிசம்பர், 2016

சசிகலா புஷ்பா : எந்த சூழ்நிலையிலும் அரசியலில் ஈடுபட மாட்டேன் என்று உறுதி கடிதம் கொடுத்த சசிகலா எப்படி பொது செயலாளர் ஆகலாம்? அனுமதிக்க மாட்டேன்!

சசிகலாவை எதிர்ப்பேன்- சசிகலா புஷ்பா! பொதுச்செயலாளர் பதவியை சசிகலா கைப்பற்ற ஆட்சிமன்றக் குழுவின் ஒப்புதல் முதலில் வேண்டும். அதன்பிறகுதான் செயற் குழு, பொதுக்குழு எல்லாம். ஆட்சி மன்றக் குழுவில் மதுசூதனன், ஓ.பி.எஸ். தொடங்கி கட்சியின் முக்கிய மூத்த தலைவர்கள் பலரும் இருக்கின்றனர். இவர்களில் ஓ.பி.எஸ். உள்ளிட்ட சிலர் இதில் கையெழுத்திட மறுத்துள்ளனர். இந்த நிலையில், முதல்வர் ஓ.பி. எஸ்.. மற்றும் அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, தங்கமணி, வேலுமணி, வீரமணி, திண்டுக்கல் சீனிவாசன், ராஜலெட்சுமி உள்ளிட்ட பலரையும் கார்டனுக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார் சசிகலா. இந்நிலையில், இன்னமும் அ.தி.மு.க எம்.பி.யாகவே நீடிக்கும் சசிகலாபுஷ்பா, தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு புகார் கடிதம் கொடுத்திருக்கிறார். அவரிடம் நாம் பேசியபோது, ""எந்தச் சூழலிலும் அரசியலில் ஈடுபட மாட்டேன் என ஜெ.விடம் மன்னிப்பு கடிதம் கொடுத்த சசிகலா, அம்மா வகித்த பொதுச்செயலாளர் பதவியைப் பெற துடிக்கிறார். கட்சியின் செயற்குழு உறுப்பினர்களாக இருப்பவர்கள்தான் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடமுடியும். சசிகலா செயற்குழு உறுப்பினர் கிடையாது. கட்சியில், மூத்த தலைவர்கள் பண்ருட்டிராமச்சந்திரன், பி.ஹெச்.பாண்டியன், செங்கோட்டையன், மதுசூதனன் போன்ற பலரும் இருக்கிறார்கள். சசிகலா போட்டி யிட்டால் அவரை எதிர்த்து நான் போட்டியிடுவேன். என்னை தடுக்க நினைத்தால் அந்த சதியை முறியடிக்க கோர்ட்டுக்குப் போவேன்'' என்கிறார் சசிகலாபுஷ்பா. நக்கீரன்,இன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக