ஞாயிறு, 11 டிசம்பர், 2016

வர்தா… உச்சக்கட்ட முன்னெச்சரிக்கை!

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள வர்தா புயல் சென்னைக்கும் ஆந்திர மாநிலத்தின் கடலோரப் பகுதியான ஓங்கோலுக்கும் இடையே கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது, அதி திவீர புயலாக வலுவடைந்துள்ளதால் ஆந்திர, தமிழக அரசுகள் உச்சக்கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ளது. இந்தப் புயலின் தாக்கம் எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருக்கலாம் என்பதால் இன்று மாலை தொடங்கி அடுத்த 36 மணி நேரத்துக்கு மழையுடன் கூடிய காற்றும் இருக்கும் என்று எச்சரிக்கிறது வானிலை மையம். நாளை பிற்பகலில் இந்த புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல்வர் ஆலோசனை

வர்தா புயலை எதிர்கொள்வது தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ், அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். இந்த ஆலோசனையில் தேசிய பேரிடர் மீட்புக்குழு அதிகாரிகள், கடற்படை அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.
தாக்கம் எப்படி இருக்கும்?
கடந்த வருடம் பேரழிவை உண்டாக்கிய டிசம்பர் மழைக்குப் பிறகு அனைவரும் திரும்பிப் பார்த்த நபர், ‘தமிழ்நாடு வெதர் மேன்’ என்ற பெயரில் முகநூலில் இயங்கும் பிரதீப் ஜான். இன்றைய தேதியில் வானிலை ஆய்வு மையத்தின் தகவல்களுக்குப் பிறகு ஜான் என்ன சொல்கிறார் என்றுதான் பல பிரபலங்களும் ஃபாலோயர்ஸும் கேட்கிறார்கள். அந்த அளவுக்கு இவர் பிரபலம். திமுக தலைவர் கருணாநிதியே இவருடைய வானிலை அறிவிப்புகளை வியந்து பாராட்டியிருக்கிறார்.
அந்த பிரதீப் ஜான், ‘டிசம்பர் 12ஆம் தேதி வருகிறது ஒரு புதிய புயல். அது நம் இயல்பு வாழ்க்கையைக் குழப்பலாம்’ என்றார். அதன் பின்னர் நேற்று ‘வர்தா’ புயலின் தாக்கல் எப்படி இருக்கும் என்று எழுதியுள்ளார். அதன்படி ‘மரங்கள் சாயலாம், தொலைத்தொடர்புகள் துண்டிக்கப்படலாம்’ என்று அறிவித்திருக்கிறார்.
துறைமுகத்தில் வரலாறு காணாத எச்சரிக்கை
இந்நிலையில் எண்ணூர் துறைமுகத்தையொட்டிய சுற்று வட்டாரப் பகுதியை புயல் தாக்கும் என்பதால் 10ஆம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.மின்னம்பலம்,காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக