திங்கள், 12 டிசம்பர், 2016

சென்னை காசி தியேட்டரில் தேசியகீதத்துக்கு எழுந்து நிற்க மறுப்பு .. சண்டை!

 திரையரங்குகளில் ஒவ்வொரு காட்சி தொடங்கும் முன்பும் தேசிய கீதம் கட்டாயம் இசைக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், சென்னை காசி திரையரங்கில் தேசிய கீதம் இசைத்த போது எழுந்து நிற்காதவர்கலோடு சிலர் தகராறு . திரையில் தேசிய கொடியை காட்ட வேண்டும் என்னும் உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, அனைத்து திரையரங்குகளிலும் தேசிய கீதம் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில் உள்ள காசி திரையரங்கில் நேற்று தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அப்போது சிலர் எழுந்து நிற்கவில்லை என்று அங்கிருந்த சிலர் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, உடனடியாக திரையரங்கில் இருந்தவர்கள் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், 15 பேரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். தேசிய கீதத்தை பயன்படுத்தி, வர்த்தக ரீதியில் ஆதாயம் தேடக்கூடாது. இசை, நகைச்சுவை நிகழ்ச்சிகளில் தேசிய கீதம் இசைக்கப்படக்கூடாது. தேசிய கீதம் இசைக்கும்போது, மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் எழுந்து நிற்க தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மின்னம்பலம்,காம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக