ஜெ., அண்ணன் மகள் தீபாவின் பேட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த செய்தி சேனலில் ஒளிபரப்ப துவங்கிய சிறிது நேரத்தில் பாதியிலேயே தடாலடடியாக நிறுத்தப் பட்டது. பார்த்துக் கொண்டிருந்த தமிழக மக்கள் ஷாக் ஆனார்கள். என்ன காரணம் என்று புரியவில்லை. இதற்குள் முகநூல் போராளிகள் பொங்கித் தீர்த்தனர். பாண்டேவை கழுவிக் கழுவி ஊற்றினார்கள். சசிகலா மிரட்டியதால் தான் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது என்று கிண்டல் அடித்தார்கள்.
மக்களின் கண்டனத்திற்கு ஆளான, அந்த செய்தி நிறுவனம் பயந்து விட்டது. பெயர் கெட்டுவிடும். அரசியலுக்கு பயந்து ஒளிபரப்பவில்லை என்று பேசுவார்கள். இப்போது இன்னொரு
ரகசியமும் கசிந்துள்ளது.அதாவது தீபாவின் பேட்டி மொத்தமும் வேண்டும் என்று ‘அந்த’ சிதம்பர தெய்வம் கேட்டுள்ளது நிறுவனமும் மொத்த புட்டேஜையும் கொடுத்து அனுப்பியதாம். அதை முழுமையாக போட்டுப் பார்த்த தோட்டம் அங்கேயே தங்களின் டிவி நிருவனத்தில் இருந்து எடிட்டர் குழுவை வரவைத்து தீபாவின் பேட்டியை எடிட் செய்தார்களாம். அதன் பின் போனால் போகிறது என்று மீதி கொஞ்சம் பேட்டியை கொடுத்தார்களாம். அதன் பின்தான் ரங்கராஜ் பண்டேவிற்கு உசுரே வந்ததாம். அதை நேற்று ஒளிபரப்பினார்கள். ஆனால், உற்றுப்பார்த்தால் ஆங்காங்கு ஓட்டை தெரிகிறது. லைவ்டே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக