புதன், 7 டிசம்பர், 2016

அமைச்சர்கள் பதவி ஏற்கும்போது ஒருவர் கூட அழவில்லை .. முன்பு விக்கி விக்கி அழுதாங்களே?


ஜெயலலிதா உயிரோடு
இருந்து இரண்டு முறை சிறை சென்றபோதிலும் அழுது கண்ணீர் விட்ட அதிமுக பிரமுகர்களிடம், ஜெயலலிதா மரணத்தின்போதும் பன்னீர் பதவியேற்றபோதும் அந்தக் கண்ணீர் மிஸ்ஸிங் என்கிறார்கள். தமிழக முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாமல் கடந்த 75 நாட்கள் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர், கடந்த டிசம்பர் 5ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு இயற்கை எய்தினார் என்ற அறிவிப்பை வெளியிட்டது அப்போலோ நிறுவனம் வெளியிட்டது. அதற்கு முன்பு அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் கூட்டப்பட்டு சட்டமன்றத் தலைவரை நியமனம் செய்தனர். அதன் பிறகு ஆளுநர் மாளிகையில் டிசம்பர் 6ஆம் தேதி நள்ளிரவில் ஓ.பி.எஸ். முதல்வராக பதவியேற்றார். அவருடன்   ஹாப்பி இன்று முதல்  ஹாப்பின்னு பாடியிருப்பாங்களோ?
யார் முகத்திலும் துக்கமும் தெரியவில்லை. அதற்கான உண்மையும் தெரியும். ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் பதவியேற்கும்போது கதறி அழுது நடித்திருப்பார்கள். கேமராவுக்கு அழுதுகொண்டு போஸ் கொடுத்திருப்பார்கள். காரணம், ஜெயலலிதா டி.வி-யைப் பார்த்தால் பதவியை பறித்துவிடுவார் என்ற பயத்தில். இப்போது உயிர் பிரிந்த சில மணி நேரத்திலேயே ஜெயலலிதாவை மறந்து விட்டார்கள். அவர் கண்விழித்தா பார்க்கப் போகிறார் என்ற அலட்சியமே இதற்கு காரணம். ஆனால், ‘நடித்தவர்களை ஜெயலலிதாவின் ஆத்மா மன்னிக்காது’ என்கிறார்கள் அதிமுக-வினர். மின்னம்பலம்.காம்

அமைச்சர்களும் பதவியேற்றார்கள். இதில் ஆச்சர்யம் என்னவென்றால், ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூருவில் சிறைக்கு சென்றபோது, இதே ஆளுநர் மாளிகையில், இதே ஓ.பி.எஸ். முதல்வராக பொறுப்பேற்றார். மற்ற அமைச்சர்களும் பொறுப்பேற்றபோது, ஒவ்வொருவரும் கதறி அழுதுகொண்டு பதவியேற்றார்கள். ஆனால், அதே ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்கும்போது, ஒருவர் கண்களில்கூட ஒரு சொட்டு கண்ணீர் வரவில்லை. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக