வியாழன், 29 டிசம்பர், 2016

மோடி தூக்கு போட்டு சாவு’’ மானஸ்தானா..? என்ற கேள்வியால் பாஜகவினர் கொதிப்பு..!!

நாடுமுழுவதும் உள்ள பழைய ரூபாய் நோட்டுக்களான ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுக்கள் செல்லாது என கடந்த மாதம் 8ம் தேதி மோடி அதிரடியாக அறிவித்தார். இதனையடுத்து, புதிய ரூபாய் நோட்டுக்களான ரூ.500 மற்றும் ரூ.2,000 நோட்டுக்கள் வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையத்தில் எடுத்துக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்திருந்தது.
ஆனால், புதிய நோட்டுக்கள் அச்சிட்டு புழக்கத்தில் விட ரிசர்வ் வங்கி தொய்வு காட்டியது. இதனால் நாட்டில் ரூ.2,000 நோட்டுக்கள் மட்டுமே நாடுமுழுவதும் புழங்கிய நிலையில், சில்லரை மற்றும் பணத்தட்டுப்பாடு கடுமையான பாதிப்பை மக்களிடையே நிலவிவருகிறது.
பணத்தட்டுப்பாடு குறித்து கேள்விக்கு மோடி பதிலளிக்கையில், 50 நாட்களில் எல்லாம் சரியாகிவிடும். அதற்கு பிறகு மக்களிடையே பாலாறும், தேனாறும் ஓடும் என மக்களுக்கு தெரிவித்தார். ஆனால், பழைய ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்து இன்றோடு 50 நாட்கள் ஆகியும் 90 சதவீத ஏடிஎம்கள், அதாவது கிராமங்களில் உள்ள ஏடிஎம்கள் ஒன்றில் கூட பணம் இல்லாமல் தவிக்கவிட்டுள்ளார்.
இந்நிலையில், தந்தை பெரியார் திராவிட கழகத்தின் சார்பில், மக்கள் விரோத மோடி உண்மையிலேயே மானஸ்தனாக இருந்தால் கொடுத்த வாக்கை காப்பாற்ற தூக்கில் தொங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோவையில் போராட்டம் நடந்தது.
பொதுச்செயலாளர் கோவை. ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில், மோடிக்கு தூக்குக்கயிறை பார்சல் அனுப்பும் போராட்டம் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தால், கோவை பாரதிய ஜனதா கட்சியினர் கொதித்தெழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  லைவ்டே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக