புதன், 7 டிசம்பர், 2016

தனது படத்தையும் அறிக்கையையும் வெளியிட கோரிய ஜெயலலிதா .. நிராகரித்த சசிகலா .. அப்போலோ வட்டாரங்கள் தகவல்

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் அப்பல்லோ மருத்துவமனையில் மரணமடைந்தார். அவரது முகத்தை காண வேண்டும் என கடந்த 75 நாட்களாக தொண்டர்கள் மருத்துவமனை வாசலிலேயே காத்திருந்தனர். ஆனால் கடைசியில் அவர் மரணமடைந்த பின்னரே அவரை பார்க்க முடிந்தது பலருக்கும் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் தனது புகைப்படத்தை வெளியிட்டு அறிக்கை வெளியிட வேண்டும் என ஜெயலலிதா மருத்துவர்களிடம் கூறியுள்ளார். ஆனால் அவரது தோழி சசிகலா அதனை நிறைவேற்றவில்லை என மருத்துவமனை வட்டாரத்தில் பேசப்படுகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சையில் இருக்கும் போது அவருக்கு நினைவு திரும்பியுள்ளது. அப்போது மருத்துவர்களிடம் தான் இங்கு வந்து எத்தனை நாட்கள் ஆகிறது என கேட்டுள்ளார். அதற்கு மருத்துவர்கள் பதில் சொன்னதும், ஐய்யோ இவ்வளவு நாள் ஆகிவிட்டதா? மக்கள் என்னை பற்றி என்ன நினைப்பார்கள் என வருந்தியுள்ளார். உடனடியாக என் புகைப்படத்தையும், அறிக்கையயும் வெளியிட ஏற்பாடு செய்ய மருத்துவர்களிடம் கூறியுள்ளார் ஜெயலலிதா. மருத்துவர்கள் அதனை சசிகலாவிடம் கூற சசிகலா அதற்கு மறுத்துள்ளார். கடைசி வரைக்கும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை வெளியிட்டு அவரது கடைசி ஆசையை நிறைவேற்றவே இல்லை அவரது உடன் பிறவா சகோதரி சசிகலா. வெப்துனியா.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக