வியாழன், 22 டிசம்பர், 2016

தந்தி டிவியின் கேவல விளம்பரம் :ஜெ. இறுதி ஊர்வல கவரேஜுக் தந்தி டிவிக்குதான் அதிக பார்வையாளர்கள்..

Prashanth Rangaswamy @itisprashanth இறுதி ஊர்வல கவரேஜில் தனக்கு தான் அதிக viewers என்று மார்தட்டிக் கொள்கிறது @thanthitv .உங்களுக்கும் பிணம்தின்னி கழுகுக்கும் என்ன வித்தியாசம்?
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் 5-ஆம் தேதி காலமானார். செய்தி தொலைக்காட்சியான தந்தி டிவி. டிசம்பர் 5-ஆம் தேதி 5 மணியளவில் ஜெயலலிதா இறந்துவிட்டதாக அறிவித்தது. மருத்துவமனை செய்தியை மறுத்த நிலையில், ஜெ. இரவு 11 மணியளவில் இறந்ததாக செய்தி அதிகாரப் பூர்வமான அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில், டிசம்பர் 6-ஆம் தேதி நடந்த இறுதி ஊர்வல கவரேஜை தந்தி டிவியில்தான் அதிகமானோர் பார்த்ததாக விளம்பரத்தை வெளியிட்டுள்ளது தந்தி டிவி. ஜெயலலிதா இறு ஊர்வல படத்தைப் போட்டு இந்த விளம்பரம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த விளம்பரம் சமூக ஊடகங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக