சனி, 24 டிசம்பர், 2016

வேலூர் பெண்போலீஸ் மீது ஆசிட் வீச்சு

வேலூர் : வேலூர் மாவட்டம், திருப்பத்தூரில் மர்ம நபர்கள் இருவர் பெண்
போலீஸ் மீது ஆசிட் வீசி தப்பினர்;. இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது. ஆசிட் வீச்சு : வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் என்.ஜி.ஓ., நகரை சேர்ந்தவர் சுரேஷ்,30; இவரது மனைவி லாவண்யா, 28; திருப்பத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் காவலராக பணி புரிகிறார். இவர் நேற்று(டிச.,23) இரவு 9.40 மணிக்கு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். பின்னால் வந்த மர்ம நபர்கள் இருவர், இரண்டு பிளாஸ்டிக் பாட்டிலில் இருந்த ஆசிட்டை லாவண்யா மீது வீசிவிட்டு தப்பி ஓடினர். தீவிர சிகிச்சை : வலியால் துடித்த லாவண்யாவை மீட்ட போலீசார் அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், ஆசிட் வீசிய மர்ம நபர்கள் இருவரையும் தேடி வருகின்றனர். பெண் போலீஸ் மீது ஆசிட் வீசிய சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக