செவ்வாய், 27 டிசம்பர், 2016

சுருதி ஹரிஹரா :நடிகைகளை கவர்ச்சியாக அல்லது ஆபாசமாக காட்டவேண்டிய நிர்பந்தம்?

கத்தி சண்டை படத்தில் நடிகை தமன்னா கவர்ச்சிகரமாக நடித்தது குறித்து அப்பட இயக்குநர் சுராஜ் அளித்த விளக்கத்துக்கு நடிகைகள் நயன்தாரா மற்றும் தமன்னா ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்தார்கள். இதையடுத்து இயக்குநர் சுராஜ் மன்னிப்பு கோரியுள்ளார்கள்.
சென்னையைச் சேர்ந்த ஸ்ருதி ஹரிஹரா, ஆவணப்பட இயக்குநர். மற்றும் திரைத்துறையில் உதவி இயக்குநராகப் பணிபுரிபவர். ஸ்ருதி இயக்கிய ஏ ஃபார் ஆஃப்டர்நூன், கடந்த வருடம் சிறந்த ஆவணப்படத்துக்கான தேசிய விருதைப் பெற்றது. இயக்குநர் சுராஜ் - தமன்னா விவகாரம் குறித்து ட்விட்டரில் பதிவு எழுதியுள்ளார் ஷ்ருதி. அதில் அவர் கூறியிருப்பதாவது:

கதாநாயகியைக் கவர்ச்சியாகக் காண்பிக்காததற்காக இயக்குநரிடம் திட்டு வாங்குவதும் என் உதவி இயக்குநர் பணிகளில் ஒன்று. (எனவே இதுபோன்ற மனநிலை கொண்டவர்) இயக்குநர் சுராஜ் மட்டுமல்ல. முதல் படத்தில் ஐடம் பாடலுக்கு நடனமாடச் சொன்னதற்காக அழுத நடிகையை எனக்குத் தெரியும். பெண் காஸ்டியூம் டிசைனர் என்னிடம், இவர் ஏன் நடிக்க வந்தார் என்று கேள்வி எழுப்பினார்.
இன்னொரு கதாநாயகிக்குப் புடைவை அளிக்கப்பட்டது, ஏனெனில் அப்போதுதான் இடுப்பு நன்கு தெரியும் என்பதற்காக. இடுப்பின் அருகில் வைத்து கிளாப் அடிக்காமல் முகத்தின் முன்பு வைத்து கிளாப் அடித்த உதவியாளர் திட்டு வாங்கினார்.
ஒரு பெண்ணாக நான் கருதுவது, ஆணின் உடலை விடவும் பெண்ணின் உடல் மிகவும் அழகானது. அதை எந்தப் பார்வையில் பார்க்கிறோம் என்பதுதான் முக்கியம் என்று அவர் பதிவு செய்துள்ளார்.தினமணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக