சசிகலாவை
அதிமுக-வின் பொதுச்செயலாளராக பதவியேற்க வேண்டும் என்று அதிமுக-வின்
முன்னணி பிரமுகர்களும் மாவட்டப் பிரதிநிதிகளும் நேரிலும் பத்திரிகைகள்
வாயிலாகவும் கோரிக்கை விடுத்துவரும் நிலையில், கம்பம் எம்.எல்.ஏ.
ஜக்கையனின் சொந்த ஊரான க.புதுப்பட்டியில் அதிமுக மகளிரணி பெண்கள் சிலர்
சசிகலாவை பொதுச்செயலாளராக ஏற்கமாட்டோம் என்று சில பெண்கள் கையெழுத்து மனு
ஒன்றை தயாரித்துள்ளனர்.
இந்த தகவலைக் கேள்விப்பட்ட போலீசார் அவர்கள் பற்றி விசாரித்து அவர்களை எச்சரித்தநிலையில் அந்தப் பகுதி அதிமுக மகளிரணி முத்த உறுப்பினர் ராணு தலைமையில் 5 பெண்கள் மட்டும் உத்தமபாளையம் காவல் நிலையம் சென்று சசிகலாவுக்கு எதிராக தயார் செய்த மனுவை போலீசிடமே ஒப்படைத்தனர். அந்த மனுவில் சுமார் 150 பேர் வரை கையெழுத்திட்டிருக்கின்றனர்.
அந்த மனுவில், “நாங்கள் 40 ஆண்டுகளாக அதிமுக உறுப்பினர்களாக இருக்கிறோம். 75 நாட்கள் சிகிச்சையில் இருந்த அம்மாவின் உடல்நிலை பற்றி வெளிப்படையாகத் தெரிவிக்காத சசிகலாவை அதிமுக-வின் பொதுச்செயலாளராக ஏற்றுக்கொள்ள மாட்டோம். அப்படி அவர் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு எதிராக அமைதியான முறையில் எதிர்ப்பும் போராட்டமும் நடத்துகிறோம். நாங்கள் நடத்தும் கையெழுத்துப் போராடத்துக்கு அனுமதி வேண்டும். அத்தோடு பாதுகாப்பும் அளிக்க வேண்டும்” என்று அந்த மனுவில் கோரியுள்ளனர்.மின்னம்பலம்,காம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக