செவ்வாய், 20 டிசம்பர், 2016

கொள்ளையடிக்கும் கிரெடிட், டெபிட் கார்ட் நிறுவனங்கள்! ரொக்கமில்லா பண பரிவர்தனை ; யார் வீட்டு காசு யாருக்கு போகிறது ?:

15626275_1550285804987662_4970317932428389575_oகேஷ் லெஸ் டிரான்ஸ்சாக்சன்ஸ்.. சமீப காலமாக வங்கி விளம்பரங்கள் மற்றும் அரசுத் துறை விளம்பரங்கள் மட்டுமின்றி அனைத்து செய்தி ஊடகங்களிலும் ’அடி’படும் பெயர். இந்த ரொக்கமில்லா பண பரிவர்த்தனை- மின்னனு பரிவர்த்தனை செய்ய மக்களை ஊக்குவிக்க வேண்டும்… என்று அரசு சார்பில் சலுகை அறிவிப்பு வேறு. 0.75% சலுகையாக தரப்படும் என்று…
ஆனால் நடப்பது என்ன.. ?
பெட்ரோல் பங்குகள் முதல் அனைத்து வணிக நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு மூலம் செலுத்தப்படும் பணபரிவர்த்தனைகளுக்கு உடனடியாக இல்லாமல் மூன்று நாட்கள்,, ஐந்து நாட்கள்… அல்ல 12நாட்கள் கழித்துக் கூட அந்த பணபரிவர்த்தனைக்கான சேவைக் கட்டணம் அந்த வங்கியால் வசூலிக்கப்பட்டுள்ளது.
15589547_1550285451654364_8482414783485125992_n
கடந்த 13-11-16ல்  நான் 500 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டதற்கு 25-11-16ல்  14 ரூபாய் 38 பைசா சேவைக்கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இது ஒரு உதாரணமே.’
15626275_1550285804987662_4970317932428389575_o
நாட்டில் எத்தனையோ கோடி மக்கள் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு பயண்படுத்துகிறார்கள்… அப்படியானால் அத்தனை கோடி பண பரிவர்த்தனைகான சேவைக் கட்டணமாக எத்தனை கோடிபணம் மக்களின் வங்கி கணக்கிலிருந்து பிடிக்கப்பட்டிருக்கும்.
மின்னனு பண பரிவர்த்தனைக்கு சேவை கட்டணம் ரத்து… சலுகை அளிக்கப்படும் என்ற அறிவிப்புகள் எல்லாம் என்ன ஆயிற்று.. இது குறித்து வங்கிகளில் கேட்ட போது ‘இதற்கு எங்களால் பதில் சொல்ல முடியாது’ … என்பதுதான் பதிலாக வந்தது..
எனவே மீண்டும் நமது பணபரிவர்த்தனைகளுக்கு காசோலை- செக்..கை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் வந்து விட்டது… குறைந்த தொகையோ…பெரிய தொகையோ உள்ளூர் பண பரிவர்த்தனைகளுக்கு காசோலை பயன்படுத்துங்கள்.thetimestamil.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக