செவ்வாய், 27 டிசம்பர், 2016

ஷீலா பாலக்கிருஷ்ணன் இன்னும் கைது செய்யப்படாதது ஏன்? ராம் மோகன ராவின் கூட்டாளிதான் ஷீலா

ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஷீலா பாலகிருஷ்ணனை ஆலோசகராக நியமித்த ஜெயலலிதா அவருக்கு வழங்கிய அதிகாரம் என்னவென்றால், தலைமைச் செயலாளருக்கும் மேலான அதிகாரம். தலைமைச் செயலாளர் ஒப்புதல் வழங்கிய கோப்புகள், ஆலோசகரின் ஒப்புதல் பெற்ற பிறகே முதல்வருக்கு செல்லும் என்ற வகையில் அதிகாரம் அளித்து ஆலோசகராக நியமித்தார். ஷீலா இன்று வரை அந்த பதவியில் நீடித்து வருகிறார். தலைமைச் செயலாளராக இருந்த ராம் மோகன ராவ் மீது இன்று இத்தகைய ஊழல் குற்றச்சாட்டுகள் வந்துள்ளன என்றால் அவரின் நடவடிக்கைகள் அனைத்துக்கும் ஒப்புதல் அளித்த ஷீலா பாலகிருஷ்ணன் மீது ஊழல் வழக்கு பதிவு செய்வதுதானே முறை.... செய்வாரா .... ? ஓபிஎஸ் செய்வாரா ?முகநூல் பதிவு சவேரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக