வியாழன், 15 டிசம்பர், 2016

திரையில் இருந்து நாடகத்துக்கு வந்த தோழர் ரோகினிக்கு எங்கள் வாழ்த்துக்கள்

துவக்ககால தமிழ்ச்சினிமாவின் கலைஞர்கள் பெரும்பாலும் நாடகத்துறையிலிருந்தே திரைக்கு வந்தனர்.திரையில் புகழ்பெற்ற பின்னும்கூட எம்.ஜி.ஆர். சிவாஜி, எம்.ஆர்.ராதா, என்.எஸ்.கே போன்ற பல கலைஞர்கள், தொடர்ந்து நாடகத்திலும் தங்கள் பங்களிப்பை செலுத்தியே வந்தவர்...இடையில் அந்த மரபு விட்டுப்போனாலும் நாசர்,பசுபதி,சண்முகராஜா போன்றோர் அதை இன்னமும் தொடர்ந்து வருகின்றனர்.
ஆனால் திரைத்துறையிலிருந்து நாடகத்திற்கு வந்தவர்கள் மிகவும் அபூர்வமே. அதிலும் நவீன நாடகமென்னும் சமூக செயற்பாட்டு களத்திற்கு வருவதென்பது எப்போதாவதுதான் நிகழ்கிறது.அந்த வகையின் சமீபத்திய அடையாளமாக இருப்பவர் Rohini Molleti எனும் திரைக்கலைஞர் ரோகிணி. சினிமா,நாடகம் ,சமூக செயல்பாடுகள் என கவனத்திற்குரிய வகையில் இயங்கிவரும் தோழர் ரோகிணிக்கு இனிய பிறந்த தின வாழ்த்துக்கள்.  முகநூல் பதிவு கருப்பு கருணா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக