செவ்வாய், 13 டிசம்பர், 2016

சசிகலாவை முதல்வர் ஆக்கும் பணியை ஊடகங்கள் .. ஒரு முதல்வரின் வாழ்க்கையை எப்படி இவர்களால்...

By வாசுகி பாஸ்கர்
எவ்வளவு அதிபுத்திசாலி தனமாக வியக்கணம் பேசினாலும் நாமும் ஒரு அரங்கேற்றத்தின் அங்கமாகி விட்டு இருக்கிறோம் என்பதை கவனியுங்கள்!
ஜெயலலிதா மரணம் எந்த வகையிலும் தமிழ்நாட்டை உலுக்கி விட கூடாது என்பதில் எவ்வளவு கவனமாக இருந்திருக்கிறார்கள் என்பதை வேக வேகமாக அடக்கம் செய்ததில் இருந்த முனைப்பை பாருங்கள்.
தமிழகம் முழுவதிலும் இருந்து தொண்டர்களை சென்னை நோக்கி வருவதற்குண்டான வாய்ப்பு அறிவித்த அடுத்த நாள் மாலை ஐந்து மணிக்கு அடக்கம் என்பதால் உண்மையான கூட்டம் வரவிடாமல் செய்யப்பட்டு இருக்கிறது!
என் அனுமானத்தில் முதல்வரின் இந்த எதிர்பார்க்காத மரணம் மாநிலத்தை குறைந்தது மூன்று நாலாவது உலுக்கி இருக்க வேண்டும்!
ஏழு நாள் துக்கம், மூன்று நாள் விடுமுறைக்கு முன்னமே திரையரங்குகள் மூன்று நாள் காட்சியை ரத்து செய்கிறது, படம் வெளியீடு தள்ளி போடுவதற்கான பேச்சு அடிபடுகிறது.
ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்ட இரண்டாம் நாளே சசிகலாவின் ஜாஸ் சினிமாஸ் திரைப்படங்களை காட்சி படுத்துகிறது,
அதை பார்த்து எல்லா திரையரங்கும் அடுத்த நாளே வழக்கம் போல இயங்குகிறது, கேளிக்கை துறை அத்தியாவசியம் இல்லை என்பதால் குறிப்பிட்டு சொல்கிறேன், ஜெயலலிதாவின் கைதின் போது படங்களின் ரிலீஸ் தேதிகள் தள்ளி போடப்பட்டதை கவனிக்கவும்!
மாநிலம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தது என்று அனைவரும் அதிமுகவின் ஒழுக்கத்தை பாராட்டுகிறார்கள், தமிழக போலீசுக்கு salute வைக்கிறார்கள், மோடி பக்தர்கள் ஒருபடி மேல் கலவரங்கள் எல்லாமே funded அதனால், கருப்பு பணம் இல்லாமல் கலவரம் நிகழவில்லை என மோடிக்கு salute வைக்கிறார்கள், உண்மை என்ன?
இதில் இருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டிய உண்மை, மேலிடத்தில் உள்ளவர்களின் தூண்டுதல் இல்லாமல், கட்டளைகள் பறக்காமல் எந்த வன்முறையும் நிகழாது என்பது தான் நிதர்சனம்! அந்த வகையில் சிறு அசம்பாவிதம் நடக்காமல் கவனமாக இருக்க கட்டளைகள் இடப்பட்டு இருக்கிறது! இது எதனால் என்றால்,
ஆட்சி அமைத்து வெறும் ஆறு மாத காலமே ஆகி இருக்கிறது, தொக்காக இன்னும் நான்கரை ஆண்டு இருக்கிறது, இதே மரணம் நான்கரை ஆண்டு இறுதியில் நிகழ்ந்து இருந்தால், ஜெயாவின் இழப்பு பெரும் இழப்பாக முன் நிறுத்த பட்டு இருக்கும், அல்லது திமுக ஆட்சியில் இருந்திருந்தால் அதைவிட உக்கிரமாக இருந்திருக்கும்!
ஜெயா இல்லாமல், அனைத்தையும் தன் கட்டுப்பாட்டில் வைத்து சாதித்து காட்ட சசிகலா இதை ஒரு சந்தர்ப்பமாக எடுத்து கொண்டார்
ஒரு கைதின் போது நம்மை பாதித்த விஷயம், சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முடியாத தன்மை, பேரிடியான மரணத்தை சுலபமாக கடந்து போய் இருக்கிறது என்றால், ஆட்டிவிப்பவர் இல்லாமல் ஆடாது என்பது விளங்குகிறது!
எல்லாமே திட்டமிடப்பட்டு, மக்களை இயல்பு வாழ்க்கையில் இருந்து பாதிக்க விடமால், சராசரி வாழ்க்கையை கொடுத்து விட்டால் இந்த பேச்சுக்கள், தாக்கம் குறைய ஆரம்பிக்கும் என்பதற்காக மிக சாதுரியமாக stragety அமைத்து அரங்கேறி இருக்கிறது, ஜெயாவின் மரணத்திற்கு very next day சென்னை டிராபிக் ஜாம் ஆகி இப்படியான இயல்பு மாற்றத்திற்கு மாறும் என நான் நினைத்து கூட பார்க்கவில்லை, இவை எதுவுமே அதுவாக நடந்ததில்லை, நடத்தி வைக்கப்பட்டது!
எதுவானாலும், நமக்கு இப்போ இருக்கும் ஒரே நம்பிக்கை இணையம் மட்டுமே, சசிகலாவை முதல்வர் ஆக்கும் பணியை பெரும்பாலான ஊடகங்கள் கையில் எடுத்து விட்டது, எப்படியும் ஆக்கி விடுவார்கள், அரசியலில் சாமர்தியத்தனம் இருப்பவனால் தான் வெற்றி பெற முடியும், சசிகலா வெற்றி பெறுவார், நாம் salute செய்ய வேண்டியது, அதிமுகாவுக்கோ, தமிழக போலீசுக்கோ, மோடிக்கோ அல்ல, சின்னம்மா சசிகலாவுக்கு!
பிழைப்பவர்கள் சசிகலா பக்கத்தில் இருப்பார்கள், மனசாட்சிக்கு அடிபணிகிற வெகு வெகுசிலர், ஒதுங்கிக்கொள்வார்கள்!
வேடிக்கை பார்ப்போம்!முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக