திங்கள், 12 டிசம்பர், 2016

அம்மா திராவிட முன்னேற்ற கழகம் நிச்சயம் உருவாகும் என்கிறார்கள்

அதிமுக நிர்வாகிகள் சசிகலாவை பொதுச் செயலாளர் பொறுப்பை ஏற்குமாறு வலியுறுத்தை தொடர்ந்து விரைவில் அம்மா திராவிட முன்னேற்ற கழகம் என்று புதிய கட்சி உருவாகும் என்று அதிமுக மூத்த அமைச்சர் ஒருவர் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நேற்று மாலை அதிமுக நிர்வாகிகள் அனைவரும் நேரில் சென்று, சசிகலாவை அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பு ஏற்று கட்சியை வழிநடத்துமாறு கேட்டுக்கொண்டதாக செய்திகள் வெளியானது. ஆனால் அதிமுக தொண்டர்கள் சசிகலா பொதுச் செயலாளர் பதவி ஏற்க விரும்பவில்லை. இதையடுத்து பத்திரிக்கை ஒன்றில் புது கட்சி ஒன்று உருவாக போவதாக அதிமுக மூத்த அமைச்சர் ஒருவர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:- அதிமுகவின் பொதுச்செயலாளரும், தமிழக முதல்வராகவும் இருந்து வந்த ஜெயலலிதா இறந்து ஒரு வாரம் கூட ஆகவில்லை. அதற்குள் சசிகலாவை அதிமுகவின் பொதுச்செயலாளராக பதவி ஏற்கச்சொல்லி அதிமுக நிர்வாகிகள் வற்புறுத்தி வருவதாக செய்திகள் வருகிறது.
இந்த வேலையை சசிகலாவின் கணவர் நடராஜன் திட்டமிட்டு பரப்பி வருகிறார். பதவியை தக்க வைத்துக்கொள்ள இப்படி சசிகலாவிடம் சரணடைந்து விடுகிறார்கள். ஆனால் தொண்டர்கள் சசிகலாவை விரும்பவில்லை. இதனால் பல்வேறு மாவட்டங்களில் அம்மா திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரில் புதிய கட்சி ஒன்று உருவாகி வருகிறது. அதற்கான தலைவர் விரைவில் அறிவிக்கப்படுவார்.வேப்துனியா கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக