புதன், 21 டிசம்பர், 2016

தலைமை செயலர் ராமமோகன் ராவ் வீட்டில் ஐடி ரெய்டு! சேகர் ரெட்டி வீட்டில் முக்கிய ஆவணம் போயஸ் கார்டன் தொடர்பு ...

சென்னை: தமிழக அரசு தலைமை செயலர் ராமமோகன் ராவ் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழக அரசின் முதன்மை கான்டிராக்டராக இருப்பவர் சேகர் ரெட்டி. போயஸ் கார்டனுக்கு மிக நெருக்கமான சேகர் ரெட்டி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். IT department raids TN Chief Secretary Ram Mohan Rao's house  இச்சோதனையில் ரூ131 கோடி ரொக்கம், 171 கிலோ தங்கக் கட்டிகள் சிக்கின. இவற்றில் பெரும்பகுதி 5 மூத்த அமைச்சர்களுக்கு சொந்தமானது என தெரியவந்தது. இதையடுத்து சேகர் ரெட்டி மீது தற்போது அமலாக்கப் பிரிவு மற்றும் சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர். எந்த நேரத்திலும் சேகர் ரெட்டி கைது செய்யப்படலாம் எனவும் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசின் தலைமை செயலர் ராமமோகன் ராவ் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சேகர் ரெட்டி வீட்டில் சிக்கிய ஆவணங்களின் அடிப்படையில் ராமமோகன் ராவ் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. //tamil.oneindia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக