வியாழன், 29 டிசம்பர், 2016

கணவரை கோர்ட்டில் ஆஜர்படுத்த கோரி சசிகலா புஷ்பா ஆட்கொணர்வு மனு

Sasikala filed habeas corpus in High court சசிகலா புஷ்பாவின் கணவர் மற்றும் அவரின் வழக்கறிஞர் ஆகியோர் புதன்கிழமையன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு சசிகலா புஷ்பாவின் கணவர் மற்றும் அவரின் வழக்கறிஞர், அதிமுகவினரால் சராமாரியாக தாக்கப்பட்டனர். இதில் அவரக்ளுக்கு மண்டை உடைந்து ரத்தம் கசிந்தது. போலீசார் அவரை பாதுகாப்பாக அழைத்து சென்றனர்.
பின்னர் அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு மைலாப்பூர் காவல் நிலையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டார். அத்துமீறி ஆட்களுடன் வந்து தாக்க முயன்றதாக சிந்து ரவிச்சந்திரன் புகார் அளித்தார்.
இதையடுத்து ராயபேட்டை போலீசார் லிங்கேஸ்வர திலகர் உட்பட 10 பேர் மீது பிரிவு , ஐபிசி 144 , 448 ,323, 327 , 506(2) வழக்குப்பதிவு செய்தனர். அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்ற என கணவர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.<
இப்போது வரைக்கும் அவர் எங்கிருக்கிறார் என தெரியவில்லை. காலையில் இருந்து எனது கணவரை தேடிக்கொண்டிருக்கிறேன். இது மனித உரிமை மீறல் என கூறினார் சசிகலா புஷ்பா.
தனது கணவர் தாஅக்கப்பட்டது குறித்து அவர் எங்கே இருக்கிறார் என்று சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி அலுவலகம் வரை கேட்டும் பதில் இல்லை என்று கூறியுள்ள சசிகலா புஷ்பா இது பற்றி ஆட்கொணர்வு மனு ஒன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் இன்று காலை சசிகலா புஷ்பாவின் கணவர் லிங்கேஸ்வர திலகத்தை ஆஜர்படுத்த வேண்டும்,
இல்லையேல் அவரது நிலை குறித்து போலீசார் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.
//tamil.oneindia.com/n

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக