ஞாயிறு, 11 டிசம்பர், 2016

இடைநிலை சாதிக்காரர்கள் தலித்துகள் மீது நடத்துகிற வன்மம்

சுவாதிக்கு கொடுத்த முக்கியத்துவம் இடைநிலை சாதியை சேர்ந்த நவீனாவுக்கு கொடுக்கவில்லை.நவீனாவுக்கு கொடுத்த முக்கியத்துவம் தலித் சமூகத்தை சேர்ந்த கலைச்செல்விக்கு கொடுக்கவில்லை
தலித்துகள் மாயவலையில் இருக்கின்றனர்.இங்கு நடக்கும் எல்லா கொடுமைகளுக்கும் பிராமணர்கள்தான் காரணம்.இடைநிலை சாதிக்காரர்கள் வெறும் அம்பு.இப்படிதான் இங்கு அரசியல் நகர்த்தப்பட்டு வருகிறது. கருத்தியல் வேறு.கள நிலவரம் வேறு.கடந்த 2015 ம் ஆண்டு தலித்துகள் மீது 1782 வன்கொடுமைகள் நடந்து உள்ளன.இதில் 7 பேர் மட்டும்தான் பிராமண சமூகத்தை சேர்ந்த குற்றவாளிகள்.அது மட்டும் அல்ல 97 சதவீதத்தினர் இடைநிலை சாதி காரர்கள்.அப்படி என்றால் பிராமணர்கள் சாதி பாகுபாட்டினை நடத்தவில்லையா? கண்டிப்பாக பெரும்பாலான பிராமணர்கள் சாதி துவேஷ மன நிலையில்தான் இருக்கின்றனர்.ஆனால் அவர்களால் நேரடி வன்முறையில் ஈடுபடும் சூழல் இல்லை.ஆனால் இடைநிலை சாதிக்கார்கள் நடத்துகிற வன்கொடுமையின் உச்சம் ஆபத்தானது.
கருத்தியலை பேசாமல் கீரிப்பட்டியிலும் பாப்பாபட்டியிலும் போய் தலித் குடியிருப்பில் தங்கி பாருங்கள்.தலித் மனநிலையிலிருந்து பார்க்காமல் இடைநிலை சாதிக்காரர்கள் மனநிலை மனோபாவத்தில் முற்போக்கு பேசினால் உண்மை தெரியாது.அடிக்கிற உனக்கு இது நாங்கள் அடிக்கவில்லை.பிராமணியம் அடிக்கிறது என்கிற புரிதல் இருக்கிறது.அடிவாங்குகிற எங்களுக்கும் ஆமாம் நீங்கள்தான் அடிக்கிறீர்கள்.ஆனாலும் அதற்கு காரணம் நீங்கள் இல்லை என்று எங்களை சொல்லவைப்பது எத்தகைய கொடுமை என்பதை நீங்கள் உணர்ந்து இருக்கிறீர்களா? உண்மையில் பிராமணிய எதிர்ப்பாளர்கள் தலித்துகள்தான்.நீங்கள் அல்ல.அடுத்து பிராமண எதிர்ப்புக்கு கொஞ்சம் ஓய்வு கொடுத்துவிட்டு இடைநிலை சாதிக்காரர்கள் தலித்துகள் மீது நடத்துகிற வன்மத்தை கடுமையாக கண்டிக்க இயக்கம் நடத்துவோம்.அதன் பிறகு நாம் எல்லாம் இணைந்து பிராமணியத்தை எதிர்ப்போம். சாதியின் படிநிலை எப்படி இருக்கிறதோ அப்படிதான் நீதிக்கான குரலும் இருக்கிறது.சுவாதிக்கு கொடுத்த முக்கியத்துவம் இடைநிலை சாதியை சேர்ந்த நவீனாவுக்கு கொடுக்கவில்லை.நவீனாவுக்கு கொடுத்த முக்கியத்துவம் தலித் சமூகத்தை சேர்ந்த கலைச்செல்விக்கு கொடுக்கவில்லை என்கிற உண்மை நிலையை அறிந்து செயல்பட வேண்டும்.எல்லா வன்முறைக்கும் நாங்கள் காரணம் அல்ல.அது கருத்தியல் என்றே சொல்லி வந்தால் குற்றவாளிகள் எப்படி குற்ற குற்ற உணர்ச்சிக்கு உள்ளாக்குவது.அடிக்கிற நீ நல்ல வலையில இருக்கிற.அடிவாங்குகிற நாங்கள் மாயவலையில் இருக்கிறோமா? அடுத்து சாதியத்தை ஒழிப்பது முக்கியமா? அதில் இருக்கக்கூடிய ஒரு பிரிவான பிராமணர்களை மட்டும் எதிர்ப்பது முக்கியமா? நஞ்சு நஞ்சுதான்.ஆக வாஷ் அவுட் முக்கியம்.  முகநூல் பதவு   விண்சன்ட் ராஜ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக