வியாழன், 15 டிசம்பர், 2016

அமைச்சர் தங்கக்மணியை பொதுமக்கள் சிறைப்பிடித்தனர் .. கரெண்டு வரும் வரை கூடவே இருங்க

கரெண்ட் வரும்வரை எங்கக் கூட இருங்க... அமைச்சரை சிறைப்பிடித்த பொதுமக்கள் புயல் பாதிப்புக்குப் பின்னர் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து ஆய்வு செய்ய மின்துறை அமைச்சர் தங்கமணி சென்னையை அடுத்த பல்லாவரம் நகராட்சி அலுவலகத்திற்கு வந்தார். அப்போது, தங்கமணியை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். புயல் தாக்கி 4 நாட்கள் ஆகியும் மின்வினியோகத்தை சீர் செய்யவில்லை என்று குற்றம் சாட்டினர். மின்சாரம் வந்த பிறகு நீங்கள் இந்த இடத்தைவிட்டு செல்லுங்கள், மின்சாரம் வரும்வரை எங்களுடனேயே இருங்கள் என்று அமைச்சரை விடுவிக்காமல் பொதுமக்கள் கூறியதால் ஒரு விதமான பதற்றம் நிலவியது. இதையடுத்து அதிமுக நிர்வாகிகளும், போலீசாரும் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் தங்கமணி விடுவிக்கப்பட்டார்.நக்கீரன்,இன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக