வியாழன், 22 டிசம்பர், 2016

மருத்துவ மனையில் கலைஞர் தொலை காட்சி பார்க்கிறார்

By: Sutha  திமுக தலைவர் கருணாநிதி காவேரி
மருத்துவமனையில் டிவி பார்ப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு, மக்கள் மனதில் இருந்த கவலைகளுக்கும், கேள்விகளுக்கும் விடை அளித்துள்ளது திமுக. தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல் நலம் பாதிக்கப்பட்டதாக கூறி 75 நாட்கள் மருத்துவ மனையில் இருந்தபபோது ஒரு புகைப்படம் கூட வெளியாமல் அதிமுகவும், அப்பல்லோ மருத்துவமனையும், தமிழக அரசும் மக்களை இருட்டில் வைத்த நிலையில், இதோ பாருங்கள், கருணாநிதி நலமாக இருக்கிறார் என்று கூறி திமுக தலைவர் கருணாநிதியின் புகைப்படத்தை வெளியிட்டு அசத்தியுள்ளது திமுக.< மக்களின் மனம் கவர்ந்த தலைவர்களின் உடல் நலம் குறித்து அறிந்து கொள்வதற்கு மக்களுக்கு உரிமை உள்ளது என்பதை மதித்து திமுக இந்த புகைப்படத்தை வெளியிட்டிருப்பதாகவே கருத வேண்டியுள்ளது. இதில் பூடகமோ, மறைமுகமோ தேவையில்லை என்பதையும் வெளிப்படையாக காட்டி விட்டது திமுக.
தமிழ்நாட்டு மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த தலைவர்களில் ஜெயலலிதாவுக்கும் முக்கிய இடம் உண்டு.
ஆனால் அதை சற்றும் மதிக்காமல், மக்களின் கவலைகள், கேள்விகள் பற்றி கவலையே படாமல், ஜெயலலிதா குறித்த ஒரு படத்தைக் கூட அதிமுக அரசும் சரி, அதிமுக தலைமையும் சரி வெளியிடவில்லை. மாறாக அதைப் பற்றிய கேள்விகள், கோரிக்கைகளை அது செவி மடுக்கவே இல்லை, கண்டு கொள்ளவும் இல்லை.
ஆனால் திமுக தலைவர் கருணாநிதியின் சுகவீன விஷயத்தில் திமுக அப்படி இருக்கவில்லை. மாறாக முதல் முறை அவர் சுகவீனமாக இருந்து பின்னர் மீண்ட நிலையில் ஒரு புகைப்படத்தை அது வெளியிட்டிருந்தது.
தற்போது காவேரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் டிவி பார்ப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.
இப்படி புகைப்படம் வெளியிட்டுத்தான் கருணாநிதி நலமாக இருக்கிறார் என்று காட்ட வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை என்றாலும் கூட கருணாநிதியின் நலம் குறித்த கவலையில் உள்ள மக்களுக்கு அவர் நலமாக இருக்கிறார் என்பதை தெரிவிக்க இந்த புகைப்படத்தை திமுக தரப்பு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.இது மக்களை மதிக்கும் செயல்.!
//tamil.oneindia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக