வெள்ளி, 9 டிசம்பர், 2016

ஜெயலலிதா மரணத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மீது விமர்சனங்களை அவாள் வைப்பதில்லை?

சசிகலா மேல் ஆயிரம் குற்றச்சாட்டுகள் இருந்தாலும், ஜெ மரணத்தை அவர்மேல் சுமத்துவதின் பின்னணியில் கேவலமான, மூன்றாம் தரமான அரசியல் சதியும், அதிமுகவை கைப்பற்றவேண்டும் என்ற நப்பாசையும்தான் இருக்கிறதேயொழிய உண்மை என்பதோ, ஜெ மீதான அக்கறை என்பதோ துளியும் இல்லை.
ஜெ மரணத்தில் சசிகலாவை குற்றம் சாட்டும் ஆட்களிடம், கும்பலிடம் ஒரே ஒரு கேள்வியை மட்டுமே நான் முன்வைக்கிறேன்.
அப்பல்லோவில் ஜெ அட்மிட் ஆனவுடன் ஊடகங்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. ஒரே தொடர்பு அப்பல்லோ அறிக்கைகள் மட்டும் தான். இதெல்லாம் சரி.
ஆனால்... மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் ஏய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் பலமுறை வந்து ஜெயலலிதா உடல்நிலையை ஆய்வு செய்து அறிக்கை அளித்தார்களே!! ஜெ இறுதிநாளில் மிக சீரியசாக இருக்கிறார் என்ற தகவல் வந்தபோதும் உடனே அவர்கள்தானே பறந்து வந்து ஜெ உடல்நிலையை ஆய்வு செய்தார்கள்! உடல்நிலை கோளாறால் மரணம் என்பதையும் அவர்கள்தானே உறுதி செய்தார்கள்!

ஆக , சசிகலாவை குறை சொல்லும் ஆட்கள் ஏன் மத்திய அரசின், அதாவது மோடி அரசின் கீழ் இயங்கும் ஏய்ம்ஸ் மருத்துவர்களின் அறிக்கைகளை வசதியாக மறைக்கிறார்கள்? சசி மீது குற்றம் இருப்பின், மோடி அரசும் அதில் சம்பந்தப்பட்டிருக்கிறது என்றுதானே நாம் பொருள் கொள்ள வேண்டும். சசிகலாவை மட்டும் தனியாக பிரித்தெடுத்து குறை சொல்வது ஏன்? சசி மீது வழக்குப் போடுவேன் என கொதிக்கும் ஆட்கள் ஏய்ம்ஸ் மருத்துவர்கள் மீதும், அவர்களை அனுப்பிய மோடி மீதும் போடுவார்களா?
அதனால்தான் நான் மீண்டும் மீண்டும் மீண்டும் சொல்கிறேன், சசிகலா மேல் ஆயிரம் குற்றச்சாட்டுகள் இருந்தாலும், ஜெ மரணத்தை அவர்மேல் சுமத்துவதின் பின்னணியில் கேவலமான, மூன்றாம் தரமான அரசியல் சதியும், அதிமுகவை கைப்பற்றவேண்டும் என்ற நப்பாசையும்தான் இருக்கிறதேயொழிய உண்மை என்பதோ, ஜெ மீதான அக்கறை என்பதோ துளியும் இல்லை.
- By டான் அசோக். முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக