வியாழன், 29 டிசம்பர், 2016

அதிமுக தொண்டர்கள் கடும் அதிருப்தியில் ... ஏராளமானோர் விலகுகின்றனர் ,

அ.தி.மு.க., பொதுச் செயலராக, சசிகலாவை தேர்வு செய்ய, அக்கட்சியின் அடிமட்ட தொண் டர்களும், நிர்வாகிகளும், கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதையும் மீறி, இன்றைய பொதுக்குழுவில், அவர் தேர்வு செய்யப்பட்டால், கூட்டம் கூட்ட மாக வெளியேறுவோம் என, ஆவேச எச்ச ரிக்கை விடுத்துள்ளனர். அதே நேரத்தில், முதல் வர் பன்னீர்செல்வத்திற்கு, பல தரப்பிலும் ஆத ரவு பெருகி வருவது, அக்கட்சி வட்டாரத் தில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அ.தி.மு.க., பொதுச் செயலராக, சசிகலாவை தேர்வு செய்யும் முயற்சிகள், அக்கட்சியில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இன்றைய பொதுக்குழுவில், அவருக்கு முடிசூட்ட, கட்சி யின் முன்னணி நிர்வாகிகள், அமைச்சர்கள் முடிவு செய்துள்ளனர். மேல் மட்ட ஆதரவுடன், அப்பொறுப்புக்கு வர, சசிகலாவும் தயாராக இருக்கும் தகவல் வெளியாகி உள்ளது.


இதையடுத்து, சசிகலா பொறுப்பேற்பதை விரும்பாத, கீழ்மட்ட நிர்வாகிகளும், தொண்டர் களும், வெளியேற திட்டமிட்டுள்ளனர். பொதுக் குழு முடிவுக்கு பின், வெளியேற்றம் துவங்கும் என்றும், அதற்கான துவக்கம் தான், நடிகர் ஆனந்தராஜ் விலகல் என்றும், அக்கட்சியில் பேசப்படுகிறது.

இதுகுறித்து, அ.தி.மு.க.,வட்டாரம் கூறியதாவது: ஜெயலலிதா இருந்த இடத்தில், சசிகலா வரு வதை விரும்பாத, நடிகர் ஆனந்தராஜ், நேற்று, அ.தி.மு.க.,வில் இருந்து விலகினார். விலகல் கடிதத்தை, கட்சி தலைமைக்கு அனுப்பி உள்ளார். அதை அறிந்ததும், சசிகலா எதிர்ப்பாளர்களும் ஆவேசம் அடைந்துள்ளனர். அவர்கள், அ.தி. மு.க., பொதுச் செயலராக, சசிகலா தேர்வு செய் யப்பட்டால், கட்சியில் இருந்து கூட்டம் கூட்ட மாக விலகுவோம் என, தலைமை அலுவலகத் திற்கு போன் செய்து எச்சரித்துள்ளனர்.

அதை வெளிப்படுத்தும் விதமாக, சசிகலாவிற்கு எதிராகவும், முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாகவும், சென்னையிலேயே பேனர்கள் வைத்துள்ளனர்.இதன்மூலம், வெளிமாவட்டங் களில் மட்டுமின்றி, சென்னையிலும், பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு பெருகி வருகிறது.

சென்னை, கடற்கரை சாலையில், பன்னீர் செல்வம் படத்துடன் கூடிய போஸ்டர்களில், 'ஜெயலலிதா விட்டுச் சென்ற சீரிய பணிகளை, தொடர்ந்து அவரது வழியில் செயல்படுத்த, முதல்வராக பணியேற்றிருக்கும், பன்னீர் செல்வம் ஆட்சி சிறக்க வாழ்த்துகிறோம்' என கூறப்பட்டுள்ளது.'திரு.வி.க.நகர் தொகுதி அம்மாவின் உண்மை விசுவாசிகள்' சார்பில், இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதேபோல், முடிச்சூரில், அட்டை கம்பெனி சந்திப்பில், தீபாவுக்கு ஆதரவாக, பேனர் வைத்துள்ளனர்.

அதில், 'தமிழகத்தின் தலைமை ஏற்க வா; அம்மாவின் அவதாரமே; கலைச் செல்வியின் கலைக்குயிலே; கழகத்தை வழி நடத்த வா' என, தீபாவிற்கு அழைப்பு விடுத்துள்ளனர். அதில், பன்னீர்செல்வம் படமும் இடம்பெற்றுள்ளது. தமிழகம் முழுவதும், சசிகலாவிற்கு எதிராக வும், தீபா, பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாகவும், கட்சியினர் பேனர் வைக்கவும், போஸ்டர் ஒட்டவும் துவங்கி இருப்பது, சசிகலாவை தேர்ந்தெடுக்க திட்டமிட்டுள்ள நிர்வாகிகளிடம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

- நமது நிருபர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக