வியாழன், 1 டிசம்பர், 2016

அமர்த்தியா சென் :ரூபாய் நோட்டு: சர்வாதிகாரச் செயல்.. நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை...


ரூபாய் நோட்டு விவகாரத்துக்கு பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கடந்த நவம்பர் 8ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ரூபாய் 500,1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை வெளியிட்டார். இதற்கு நாடு முழுவதும் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியிருக்கின்றன. இந்த விவகாரம் குறித்து நோபல் பரிசு வென்ற பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், “அரசாங்கத்தின் இந்த அறிவிப்பால் கடந்த 20 ஆண்டுகளில் வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருந்த இந்தியப் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும். மேலும், அரசின் இந்த அறிவிப்பானது ரூபாய் நோட்டில் அரசு அளித்திருக்கும் உறுதி மொழியை அரசே மீறும் சர்வாதிகாரச் செயல்” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.minnambalam.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக